பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 77


பெருமான் சக்திக்குக் கணவன் ஆகின்றான். இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன். சிவதத்துவத்தினின்றும் சக்திதத்துவம் தோன்றுதல் பற்றிச் சிவன் சக்திக்குத் தந்தை யாகின்றான். சக்தி தத்துவத்தினின்றும் சதாசிவதத்துவம் தோன்றும் முறைபற்றிச் சிவன் சக்திக்கு மகன் ஆகின்றான். சுத்தமாயையினின்றும் இறைவனது ஞானசக்தியின் தூண்டு தலால் சிவதத்துவமும், கிரியாசக்தியின்தூண்டுதலால் சக்தி தத்துவமும் முன் பின்னாகத்தோன்றும் முறைபற்றிச் சிவன் சக்திக்குத் தமையன் எனப்படுகின்றான். இங்ஙனம் அம்மை யொடு அப்பனுக்குள்ள பிரிக்க வொண்ணாத தொடர்பினை உலகியல் உறவு முறைபற்றி உருவகஞ் செய்துரைப்பதாக அமைகின்ற்து இத்திருப்பாட்டு.இப்பாடல்களில் பல சிவபராக் கிரமங்கள் நுவலப்பெறுகின்றன.

திருக் கோத்தும்பி(10)

4 தும்பி என்பது ஒருவகை வண்டு. தலைமையுடையவண்டு கோத்தும்பி. நறுமலர்களில் படிந்து தேனுண்டு மகிழும் தலைமை வாய்ந்த அரசவண்டு மகிழ்ச்சி மிகுதியால் தேனுள்ள மலரையே சுற்றிச்சுற்றிச் சுழன்று பறத்தலைப் போல, விளையாடும் பருவத்து இளமகளிர் மகிழ்ச்சி மிகுதியால் ஒருவர்க்கொருவர் கைகோத்துக் கொண்டு சுற்றி விளையாடும் விளையாட்டினைத் தும்பி படித்தல் என்பர். இந்தவிளையாட்டில் ஈடுபட்ட இளமகளிர் கோத்தும்பியை முன்னிலைப் படுத்தி, அம்பலவனின் தேனார் கமலமாகிய திருவடித் தாமரையிலேயே சென்று படிந்து அவனது திருப்புகழாகிய இசையினையே இடைவிடாது இசைக்கும் வண்ணம் வேண்டிப் பாடுமாறு அமைந்த பனுவலாதலின் இது திருக்கோத்தும்பி என்ற திருப் பெயரினைப் பெறுகின்றது. பிரிவாற்றாத தலைவி தலை


4. இது தில்லையில் அருளப்பெற்றதாகக் கூறுவர் கடவுண்மா முனிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/95&oldid=1014155" இலிருந்து மீள்விக்கப்பட்டது