பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மா தவம் புரிவாள் 1-13. மா தவம் புரிவாள் இந்த நீர்க் கொடிகள், நீரில் இருந்து தவம் செய்வ தாகக் கூறினால், அஃது ஒரு வேடிக்கை-விளையாட்டுக் கூற்றேயாகும். இக் கொடிகளுள் தாமரைக் கொடி, தண்ணீரில் இருந்து கொண்டு மா (பெரிய) தவம் புரிவ தாகக் கொண்டு. அதற்கு மாதவம் புரிவாள்' (சா.சி.பி.) என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. 1.1.4. தாமரையின் தனிச் சிறப்பு - தண்ணிருக்குள் உள்ள மற்ற கொடிகட்கு இன்றி, தாமரைக்கு மட்டும் இப் பெயர் தந்திருப்பதில் உள்ள பொருத்தம் யாது? ஒரு வேடிக்கைப் பொருத்தம் உண்டு. தாமரை இலையில் மெழுகு போன்ற ஒரு பொருள் இயைந் திருப்பதால், தாமரை இலையில் தண்ணீர் ஒட்டுவதில்லை. தாமரை இலையில் ஒரு சொட்டுத் தண்ணீர் தெளித்தாலும், அது முத்துப் போல் திரண்டு வெளியாகி விடும். தாமரை தண்ணீரில் ஒட்டி முளைத்திருந்தும் ஒட்டாதது போல் காணப்படுகிறது. உண்மைத் தவசிகள், மாந்தர் நடுவண் ஒட்டியும் ஒட்டாமல் இருப்பர். தாமரை இலையின் நிலை யும் அதுதானே! இங்கே, " தாமரை யிலையினிலே தண்ணிர் தங்காத் தன்மைபோல் சகத்தாசை தள்ளிவிட் டெங்கும் தூமணியாய் விளங்கிய சோதி பதத்தைத் தொழுது தொழுது தொழுது ஆடாய் பாம்பே'(70) என்னும் பாம்பாட்டி சித்தர் பாடலும் மற்றும் திருவேங்கட நாதர் அருளியுள்ள கீதாசாரத் தாலாட்டு என்னும் நூலில் உள்ள வீடும் தாரமும் உறவும் மேவி என்றும் இருந்தாலும் நீடுந்தாமரை இலைநீர் நிகராவார் என்றவரோ'(97) A ன்னும் பாடலும் எண்ணத் தக்கன.