பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மா தவம் புரிவாள் மண்டிக் கிடப்பதைப் பேயாட்டம்' மண்டிக் கிடக்கிறது என்று சொல்லும் உலக வழக்கு உண்டு. ஒருமுறை எங்கள் வீட்டுத் தோட்டத்தில், ஏராளமாகப் படர்ந்து கிளைத்துக் கொண்டிருந்த தூதுவளையைக் கண்ட விருந்தினர் ஒருவர், என்ன இது! பேயாட்டம் மண்டிப் போயிற்றே!' என்று கூறியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குப்பைக் கீரை இலக்கியத்திலும் இடம்பெற் றுள்ளது. தன் தாயும் மனைவி மக்களும் பசியால் வாடும் வறுமையின் உயரிய எல்லையை ஓவியப்படுத்திக் கூறி, புலவன் ஒருவன் குமண வள்ளலிடம் பரிசு கேட்பதாக அமைந்த பரிசில் கடா நிலை என்னும் துறையின் பேரால் பெருஞ்சித்திரனார் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் பகுதி யொன்று, படிப்பவரின் - கேட்பவரின் கல் மனத்தையும் கரையச் செய்துவிடும்; புறநானூறு - 159. 'வாழு நாளோடு யாண்டுபல உண்மையின் தீர்தல் செல்லாது என் உயிர்எனப் பலபுலந்து கோல் காலாகக் குறும்பல ஒதுங்கி நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்துயின்று முன்றிற் போகா முதிர்வினள் யாயும், பசந்த மேனியொடு படரட வருந்தி மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள் பிசைந்துதின வாடிய முலையிள் பெரிதழிந்து குப்பைக் கீரை கொய்கண் அகைத்த முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பு:இன்று நீர் உலையாக ஏற்றி மோர்இன்று அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து மாசொடு குறைந்த உடுக்கையள் அறம்பழியாத் துவ்வாளாகிய என் வெய்யோளும் என்றாங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப (1-15)