பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 95 "நான்தான் மிகப்பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேனேஇன்னும் எனக்கு எதற்கு வாழ்நாள்? - என் தலைவிதி இன்னும் பல ஆண்டு காலம் எனக்கு உள்ளது போலும்! - அதனால் என் உயிர் போகவில்லை என்று தன் பல்லாண்டு வாழ்நாளை வெறுத்து, கோலையே காலாகக் கொண்டு, விரைந்து நடக்க இயலாமையால், அடிமேல் அடிவைத்துப் பல குறுநடையிட்டு ஒதுங்கி நடந்து, வெள்ளை நூல் விரித்தாற் போன்ற தலைமயிருடன் தெரியாத கண்ணை மூடிக்கொண்டு, வீட்டு முற்றம் வரையிலுங்கூடப் போக முடியாமல் முதிர்ந்து தளர்ந்து வருந்துகிறாள் தாய்க் கிழவி. மனைவியோ, நிறங் குன்றிய உடலொடு பல்வகைத் துன்பத் தால் வருந்தி, இடுப்பைச் சுற்றியுள்ள குழந்தைச் சிறார் பலர், பால் வராமையால் குடிக்காமல் கையால் பிசைந்து தின்னுகிற வாடிய முலையுடன், மிகவும் துன்புற்று, குப்பையில் தானாக முளைத்த கீரைச் செடியில் முன்பு பறித்து விட்ட கணுக்களிலிருந்து புதிதாகக் கிளைத்துள்ள முற்றாத இளந்தளிரைப் பறித்துவந்து, உப்புகூட இல்லாத வெறுந் தண்ணீர் உலையில் இட்டு வேகவைத்து எடுத்து, மோரும் இன்றி. ஆரவாரமான அமிழ்த உணவை மறந்து, சரியாக வேகாத பச்சை இலையைத் தின்று, அழுக்கு ஏறிய - அளவில் குறைந்த ஆடையுடையவளாகி, தம் குடும்பத் திற்கு நல்லது நல்காத அறக் கடவுளைப் பழித்துக்கொண்டு, ஒரு நலனும் துய்க்காமல், அதே நேரம் என்மேல் பெரு விருப்பம் கொண்டவளாய் உள்ளாள் என்பது பாடல் பகுதியின் கருத்து. இதில், குழந்தைகள் (சிலர் அல்லர்) பலர் முலையையே .தின்னத் தொடங்குதல், குப்பையில் உள்ள கீரைச் செடி, அதில் உள்ள கீரைகள் முன்பே பல முறை பறிக்கப் பட்டிருத்தல், கணுவிலிருந்து புதிதாக முளைத்தல், முற்றா திருத்தல், இளைய தளிர்க் கொழுந்தும் வேறு உணவுப்