பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மா தவம் புரிவாள் பொருள் இல்லாமையால் பறிக்கப்படல், உப்பும் இல்லாமை, எண்ணெய்-தாளிதம் ஒன்றும் இல்லாத வெற்று நீர் உலை, மோரும் இன்மை, நல்ல உணவு என ஒன்று உண்டு என்பதை மறந்தே போனமை, பசி தாங்காமையாலும் எரி பொருள் போதாமையாலும் சரியாக வேகவிடாமல் விரைந்து இறக்கி விட்டதால் பசுமையாகவே இருக்கும் கீரையுணவு, குறைந்த அழுக்கு உடை, கடவுளைப் பழித்தல், இன்பம் என்பதையே துய்த்தறியாமை, இந்த நிலையிலும் கணவன் மீது பேரன்பு கொண்டுள்ளமை - ஆகிய செய்திகள் உள்ளத்தை உருக்குவன வாகும். இப்புறப் பாடல் பகுதியால், வறியோர்க்குக் குப்பைக் கீரை புரியும் பேருதவி புலனாகும். மழை பெய்யும் இரவில் பசியோடு வந்திருக்கும் சிவனடியார்க்கு உணவு படைக்க, இளையான் குடிமாற நாயனார், தோட்டத்துக் கீரையைப் பறித்துக் கொண்டு வந்து, கறி சமைக்க மனைவியிடம் தந்தமை கூறும் பெரிய புராண வரலாறு ஈண்டு ஒப்பு நோக்கற் பாற்று. இதுகாறும், குப்பை மேனி, குப்பை வேளை, குப்பைக் கீரை ஆகியவற்றின் பெயர்க் காரணங்கள் விளக்கப் பட்டன. 10. நூலும் பெயர்களும் 10.1 தேரையர் பாடலில் காந்தி மெய் என்னும் பெயரும், சங்கத்து அகராதியில் திருமேனி-திரிபுரத்தான் என்பனவும், வைத்திய மலையகராதியில் அக்கினிச் சிவம்அரி மஞ்சரி - தனி வல்லிப் பெருமாள்.மயிலம் . பயிலியம் என்பனவும், மூலிகை வைத்திய அகராதியில் தெருவிலழகுமேனி - திருமேனி அழகு-சக்கிர புட்பி-பயிலியம்-பூனை வணங்கி என்பனவும், சித்த வைத்திய அகராதியில் வினை