பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. காணாமல் பூ பூக்கும் - கண்டு காய் காய்க்கும் | விடுகதைகள் 1. கண்டு பூ பூக்கும் - காணாமல் காய் காய்க்கும் - அது எது? 2. காணாமல் பூ பூக்கும் - கண்டு காய் காய்க்கும் - அது எது? 3. பூத்தும் காய்க்காத மரம் எது? 4. பூவாது காய்க்கும் மரம் எது? இவ்வாறு சிறுவர் சிறுமியர் விடுகதைகள் போடுவதும் அவற்றை வெடிப்பதும் உண்டு. 1.1 முதல் விடுகதையின் பதில் பூசணி ஆகும். பூசணிப் பூ பூத்திருப்பது நன்றாகத் தெரியும். ஆனால் காய்க்கத் தொடங்குவது கண்ணுக்குத் தெரியாது. பூசணிப் பூ பூப்பதற்கு முன் அரும்பு நிலையில் உள்ளபோதே குல் கொண்டு விடும். பூவினுள் பிஞ்சு தோன்றிப் பருக்கத் தொடங்கும். மலர் சாய்ந்ததும் காய் வெளியில் தெரிய வரும். இரண்டாவது விடுகதையின் பதில் அத்தி, ஆல் முதலியன. இவை பூப்பது தெரியாது; காய்ப்பதே தெரியும். முறையே மூன்றாவது நான்காவது விடுகதைகளின் விடைக