பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர. சண்முகனார் .99 ளாகிய பூத்தும் காய்க்காத மரங்களும், பூவாது காய்க்கும் மரங்களும் யாவை என்பது அடுத்து விளக்கப்படும். பூவாதும் காய்க்கும் மரங்களும் - பூத்தும் காயா மரங்களும் 1.1.1 இலக்கியச் சான்று பூக்காமலே காய்க்கும் மரங்களும் உள்ளன; நல்லன. அறிந்து நன்கு ஒழுகுபவர்களும் நல்லறிவு நூல் வல்லவர் களும், மூவாத இளைஞராயிருப்பினும், மூத்த தகுதியின ராவர்; மக்கள் செயற்கையாக விதைக்காமலே, இயற்கை யாக முளைக்கும் விதைகளும் உள்ளன; மேதைக்கு ஒருவரும் உரைக்காமலே நல்லுணர்வு தோன்றும். இவற்றிற்கு எதிர் மாறாக, பூத்தாலும் காய்க்காத மரங்களும் உள்ளன; நல்லன அறியாரும் நல்ல நூல் அறிவு பெறாதாரும், அகவை முதிர்ந்திருப்பினும், மூத்தவர்க்கு உரிய தகுதியினைப் பெற்றவராகார்; பாத்தியில் நட்டாலும் முளைக்காமல் கெட்டுப்போகும் விதைகளும் உண்டு; பேதைக்கு எவ்வளவு உரைத்தாலும் நல்லுணர்வு தோன்றாது. இக்கருத்துகள் அமைந்த பாடல்கள், சங்க காலஞ் சார்ந்த பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாகிய சிறுபஞ்சமூலம் என்னும் நூலில் உள்ளன. அவையாவன: 'பூவாது காய்க்கும் மரமுமுள. நன்றறிவார் மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா விதையாமை நாறும் வித்துள, மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு'. (22) 'பூத்தாலும் காயர் மரமுமுள. நன்றறியார் மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் - பாத்திப் புதைத்தாலும் நாறா வித்துள, பேதைக்கு உரைத்தாலும் செல்லா துணர்வு' (23)