பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 9 எனவே, தண்ணீரில் இருக்கும் சார்பினால், தாமரைக்கு மாதவம் புரிவாள்' என்னும் பெயர் வேடிக்கைச் சுவை யுடன் தரப்பட்டுள்ளது என அறியலாம். 1.2 தண்ணிரும் தாமரையும் தண்ணீரில் இருக்கும் செடி கொடிகட்குள் தாமரையே சிறப்பிடம் பெற்றிருப்பதால், தண்ணீருக்கும் தாமரைக்கும் நெருங்கிய இயைபு கூறப்பட்டுள்ளது. நீர் வாழ் பறவை வகைக்குத் தாமரைச் சிறகி என்னும் பெயர் தமிழ்ப் பேரகராதியில் தரப்பட்டுள்ளது. சிறகி = சிறகையுடைய பறவை. இங்கே தாமரை என்பது தண்ணிரைக் குறிக்கும் சொல்லாயுள்ளது. தமிழ்ப் பேரகராதியில் தரப்பட்டுள்ள சொல் விளக்கம் வருமாறு: “girlpogé Gosp6 = A kind of teal in lotus tanks = நீர் வாழ் பறவை வகை' - என்பதாகும். teal = என்பது வாத்து வகையைக் குறிக்கும். சிவ ஞான சித்தியர்-சுபக்கம் என்னும் நூலில், மண், நீர், தீ, காற்று, வானம் என்னும் ஐந்து பூதங்கட்கும் உரிய வடிவங்களும் நிறங்களும் எழுத்துக்களும் அடையாளங் களும் தெய்வங்களும் கூறப்பட்டுள்ளன. பாடல்கள் வருமாறு; மண்புனல் அனல்கால் வான்பால் வடிவு நாற்கோண மாகும் தண்பிறை, மூன்றுகோணம், அறுகோணம், வட்டம்; வண்பொன்மை வெண்மை செம்மை கறுப்பொடு துாம வன்னம்; எண்டரும் எழுத்துத் தானும் லவரயவவ்வ வாமே". (2-67)