பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர். சண்முகனார் 103 புலப்படாது' என்றோ திறமையான பதில் வரும். அல்லது, அத்தி பூக்காமலேயே ஒரேயடியாகக் காயாகவே காய்த்துவிடும் என்றும் ஒரு குரல் பேசும். இல்லையில்லைஅத்தி மரத்தில் பூக்கள் உண்டு-அவை பூத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்' என்று அடித்துப் பேசுகிற அண்டப் புளுகு-ஆகாயப் புளுகுகளும் உண்டு. - மற்ற பூக்களைப் போல அத்திப்பூ என ஒன்று தனியாக இருக்குமானால், அது பூப்பதும் உண்மையானால், மேற் கூறிய பேச்சுகளுக்கே இடமில்லை; அத்திபூத்தாற் போல' என்ற பழமொழியும் தோன்றியிருக்க முடியாது. எனவே, இதில் ஆராய்ந்து காணவேண்டிய மறைபொருள் ஏதோ ஒன்றுள்ளது. 4-2. மறை பொருள் அத்தி மரத்தை நன்கு அறிந்து வைத்துள்ள நம் மக்கள், அத்திப் பிஞ்சு இதற்கு நல்லது-அத்திக்காய் அதற்கு ஏற்றதுஅத்திப்பழம் இதற்கு உகந்தது-அத்திப்பால் அதற்குச் சிறந்தது-என்றெல்லாம் அத்தியைப்பற்றி மருத்துவ முறை யில் நன்கு ஆராய்ந்து அறிந்து வைத்துள்ள நம் மக்கள் - அத்திப் பிஞ்சினையும் காயினையும் கூட்டு செய்தும் குழம்பு வைத்தும் பொரியல் பண்ணியும் வற்றல் போட்டு வறுவல் செய்தும் உண்டு பழகிய நம் மக்கள் அத்திப் பூவைப் பற்றிய வரலாற்றை மட்டும் அறியாதிருப்பது வியப்பா புள்ளது. அந்த வரலாற்றிணை நாம் ஈண்டு காண்போமே! ‘பூவாமல் காய்க்காது-மின்னாமல் இடிக்காது" என்னும் பழமொழிக்கேற்ப அத்தி மரத்திலும் பூக்கள் மிக உண்டு; அந்தப் பூக்களினால் காய்கள் கிடைப்பதும் உண்டு. ஆனால், மற்ற மரத்துப் பூக்களிலிருந்து, காய்கள் உண்டாவதற்கும், அத்திப் பூவிலிருந்து காய் உண்டாவதற்கும் நிரம்ப வேறு