பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 105 தமிழிலும் வடமொழியிலும் உள்ள இப்பெயர்கட்குள் கோளி என்னும் தமிழ்ப் பெயரே சங்க இலக்கியங்களில் தலைமை தாங்கியுள்ளது. அத்தி, ஆல், அரசு, பலா, அன்னாசி ஆகியன பூவாது காய்ப்பன என முன்னர்க் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள், அன்னாசி அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது; கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, இதை விட்டுவிடலாம். மற்றவற்றுள் மக்கள் உண்பன அத்தியும், பலாவுமாம். பறவைகள் உண்பன ஆலும் அரசுமாம். அத்தியிலும் பலாப்பழமே மிக்க சிறப்புடையது. அரசினும் ஆல் சிறப்புடையது. எனவே, பலாவும் ஆலும் சங்க இலக்கியங்களில் தக்க இடம் பெற்றுள்ளன. 6. 1 Gsmsflů uson கோளி மரங்கள் பல உள்ளன என்பதையும், அவற்றுள் பலா மரத்தின் பழமே சிறந்தது என்பதையும் நம் முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்பே அறிந் திருந்தனர். கேர்ளி மரங்கட்குள் பழத்தால் பலா சிறப்புப் பெற்றிருப்பது போல, கடல் சூழ்ந்த வானங் கவ்விய இவ் வுலகில் உள்ள ஊர்கட்குள் விழாவாலும் வெற்றியாலும் பழமையாலும் பலர் தொழுதலாலும் கச்சி மாநகர் மிகவுஞ் சிறந்தது என்பதாகப் பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறியுள்ளார். பாடல் பகுதி வருமாறு: கொழுமென் சினைய கோளி யுள்ளும் பழமீக் கூறும் பலாஅப் போலப் புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ விழவுமேம் பட்ட பழவிறல் முதுார்' (407-11)