பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மா தவம் புரிவாள் என்பது பாடல் பகுதி. 'கோளியுள்ளும் பழமீக் கூறும் பலாப் போல' என்னும் பகுதிக்கு உரிய நச்சினார்க் கினியரின் உரை விளக்கமாவது: 'பூவாமற் காய்க்கும் மரங்களில் விசேடித்தும் பழத்தின் இனிமையால் மேலாகச் சொல்லும் பலா மரத்தை யொக்க' என்பது. இளங்கோவடிகள் கோளிப் பலா என இணைத்தே கூறிவிட்டார். மதுரையிலே மாதரியின் இல்லத்திலே, கண்ணகியும், கோவலனும் (சமைத்து) உண்பதற்காகக் கொடுக்கப்பட்ட காய் கனிகளுள் பலாவும் இடம் பெற் றுள்ளது. அப்பகுதி (16-24,25) வருமாறு: 'கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்' என்பது பாடல் பகுதி. பாகல் என்பதற்கு பலா, கசப்புச் சுவையுடைய பாகல் காய் என்னும் இரு பொருள் உண்டு. ஈண்டு பலா எனப் பொருள் கொள்ளல்வேண்டும். இதற்கு அகச் சான்று, அடுத்துள்ள 'கொழுங்கனி' என்னும் தொடராகும். பழங்களுக்குள் கொழுத்த பெரிய பழம் பலாப்பழம் அல்லவா? இது முழவு (மிருதங்கம்) போல் இருப்பதால், இதற்கு, முழவுக் கனி, மிருதங்க பலம் (பலம்-பழம்) என்னும் பெயர்கள் உள்ளமையை மருத்துவ - மூலிகை அகர முதலி களால் அறியலாம். கோளி என்பதற்கு உரிய அடியார்க்கு நல்லாரின் உரை விளக்கமாவது:- கோளி பூவாது காய்க்கும் மரம்; என்னை? கோளி ஆலத்து என்றார்' என்பது. 6.2. கோளி ஆலம்: நச்சினார்க்கினியரும் அடியார்க்கு நல்லாரும், கோளி என்பதற்குப் பூவாது காய்க்கும் மரம் எனப் பொருள்