பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 109 இடுப்பில் கட்டியிருக்கும் துணியின் ஒரு மூலை மடித்துத் தொங்கவிடப்பட்டிருப்பதற்கு மடி என்று பெயர். சிலரே வெற்றிலை பாக்கைப் பெட்டியிலாவது சுருக்குப் பையிலாவது வைத்திருப்பார். பெரும்பாலோர் வெற்றிலை பாக்கை மடியில் கட்டி வைத்திருப்பதே சிற்றுரர்களில் வழக்கம். அதனால் வெற்றிலைக்கு மடிக் குருவி' என்னும் பெயர் சார்பினால் பெறப்பட்டது. மடி என்னும் சொல்லுக்கு இலக்கிய ஆட்சி வருமாறு: 'இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்வாங்கி மடியகத் திட்டாள் மகவை - (சிலம்பு. 9-21, 22) வயிற்று மடி மடி என்பது மடித்து வைக்கப்படும் துணியைக் குறிக்கும்; இங்கே, வயிற்றின் மேலே மடிந்து காணப்படும் துணிப்பகுதியைக் குறிக்கும். அந்தத் துணி மடி இருப்பதால், ஆகுபெயராக மடி என்பது வயிற்றுப் பகுதியையும் குறிக்கும். மகவை மடியில் இட்டாள் என்பது போல, வெற்றிலையை மடியில் வைப்பர் எனக் கொள்ளல் வேண்டும். 1.1.ஆ. குருவி குருவி என்பது, வெற்றிலைக்கு வேடிக்கையாக வைக்கப்பட்ட பெயராகும். வெற்றிலைக்கும் குருவி என்னும் சொல்லுக்கும் சில தொடர்புகளும் உண்டு. சிறிய சிறிய இலைகளையுடைய குருவி வெற்றிலைச் செடி” என்னும் ஒரு வகைச் செடி உண்டு. இளம் பருவத்தில் சிறார்களோடு சேர்ந்து கொண்டு, விளையாட்டாக, அந்தக் குருவி வெற்றிலைச் செடியின் இலைகளைப் பறித்துத் தின்ற துண்டு. மற்றும், பாக்கில், குருவிப் பாக்கு - குருவித் தலைப் பாக்கு என்னும் ஒருவகைப் பாக்கு உண்டு. குருவியின் சிறிய