பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 111 சொல்லினும் ஒரு வகையில் பொருந்தும். இங்கே மடி’ என்பதை முதனிலைத் தொழிற் பெயராகக் கொள்ளல் வேண்டும். அடிப்பது அடி-கடிப்பது கடி-பிடிப்பது பிடி - என்பன போல், மடிப்பது மடி என, மடி என்பது முதனிலை (பகுதி) மட்டுமே நின்று தொழிற் பெயராவதும் உண்டு. இனி, இங்கே, மடி என்பதைத் தொழிலாகுபெயராகக் கொண்டு, மடித்த வெற்றிலை என் அதற்குப் பொருள் செய்ய வேண்டும். செய்யவே, மடியாகிய (வெற்றிலை யாகிய) குருவி எனப் பொருள் கொள்ளுங்கால், மடிக் குருவி என்பது இப்பெயரொட்டுப் பண்புத் தொகை யாகிறது; இந்தத் தொகையில் இடையே ஒற்று மிகும் என்பது புணர்ச்சி விதி. இதுகாறும், மடிக் குருவி என்னும் பெயர், பல கோணங் களில் பொருள் செய்யப்பட்டு வெற்றிலையைக் குறிக்கும் பெயராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைச் சார்பினால் பெற்ற பெயர் எனலாம். இப்பெயர், ஜூபிலி தமிழ்ப் பேரகராதியில் தரப்பட்டுள்ளது. 1.2. பிடி குருவி பிடி குருவி (சா. சி. பி.) என்னும் பெயரும் வெற்றிலைக்கு உண்டு. வெற்றிலை, முகந்து அளக்கும் பொருளோ - நீட்டி அளக்கும் பொருளோ - நிறுத்து அளக்கும் பொருளோ அன்று. எண்ணித் தரும் பழக்கம் இப்போது பல இடங்களில் இருப்பினும், தொடக்கத்தில், பிடி பிடியாகப் பிடித்து எடுத்துத் தரும் பழக்கமே இருந்தது. மற்றும், சென்னைப் பக்கத்தில், சிறப்பு நிகழ்ச்சிகளில், வெற்றிலையை மடித்து இடக்கை விரல்களால் பிடித்து இடுக்கிக் கொண்டு, வலக்கையால் ஒவ்வொரு பிடியாக எடுத்து ஒவ்வொருவருக்கும் கொடுப்பதைச் சில ஊர்களில் காணலாம். எனவே பிடி குருவி என்னும் சார்புப் பெயரும்