பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 12 'மா தவம் புரிவாள் பொருந்தலாம். பறவையாகிய குருவியை எளிதில் பிடிக்க முடியாது; இந்தக் குருவியை எளிதில் பிடிக்கலாம் அல்லவா? 1.3 வெற்றிலை வெற்றிலையைக் குறிக்கும் மற்ற பெயர்கட்குப் பெயர்க் காரண விளக்கம் கூறுவது ஒரு புறம் இருக்க, வெற்றிலை" என்னும் பெயருக்கும் காரண விளக்கம் தர வேண்டு மல்லவா? வெற்றிலை என்பதை வெறுமை + இலை = (வெற்றிலை) எனப் பிரித்துப் பண்புத் தொகை எனக் கூறுவர் இலக்கண நூலார். வெறுமை என்பதற்கு, ஒன்றும் இல்லாமை, பயன் இல்லாமை, அறிவு இல்லாமை வறுமை, கலப்பு இல்லாமை என்ற பொருள்கள் உண்டு. இந்தப் பொருள்களுள் யாதொன்றும் இங்கே பொருந்தாது. இதற்கு ஒரு வகையான பெயர்க் காரணம் கூறலாம். மற்ற மரஞ்செடி கொடிகளில், வேர் - கிழங்கு - தண்டு - பட்டை-தளிர்-இலை-ஈர்க்கு-யூ-காய்-கனி-முதலிய உறுப்பு களுள் சிலவோ பலவோ பயன் தருபவையாயிருக்கும்; ஆனால், வெற்றிலைக் கொடியில் உள்ள உறுப்புகளுள் இலையைத் தவிர வேறொன்றும் பயன்படுவதில்லை. கொடியின் உறுப்புகளுள் வெற்று இலை மட்டும் பயன் தருவதால் வெற்றிலை எனப் பெயர் இட்டிருக்கலாம். இலையை உட்கொள்ளுமுன், அதில் உள்ள காம்பு-நுனிநரம்பு-வரம்பு ஆகியவற்றை அகற்றி உட்கொள்வது வழக்கம். இலையிலும் சிறிது கழிக்கப்படுகிறது. இங்கே வெற்று (வெறுமை) என்பதற்கு மட்டும்' (only) என்று பொருள் கொள்ளல் வேண்டும். அதாவது இலை மட்டும்’ என்பது. வெற்றிலைக்கு இலக்கிய ஆட்சி வருமாறு: