பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 113 'உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி (6-7.1) என்னும் திருவாய் மொழிப் பாடல் பகுதி காண்க. 14. வெற்றி யிலை இது மிகப் பழங் காலத்தில் வெற்றியிலை' என முதலில் வழங்கப் பட்டிருக்கலாம்; பின்னர் நாளடைவில் இப்பெயர் சுருங்கி வெற்றிலை என வழங்கப்பட்டிருக்க வேண்டும் என உய்த்துணர இட முண்டு. வெற்றியிலை என்பதன் பெயர்க் காரணமாவது: எந்த வேலையாய் வெளியிடத்திற்கோ-வெளியூருக்கோ சென்று வரப் பெரியவர்களிடம் விடை பெறுபவர்கட்குப் பெரியவர்கள் வெற்றிலை பாக்கு தந்து வெற்றியுடன் வருக என வாழ்த்தி விடை கொடுத்து அனுப்புவது வழக்கம். விடை பெறுபவர்கள், விடை யளிப்பவர் பெரியவரானால் அவருடைய கால்களில் விழுந்து வணங்கி, வெற்றிலையுடன் வாழ்த்து பெற்றுச் செல்வதும் உண்டு. இங்கே வெற்றி என்பது, போர்க்கள வெற்றியை மட்டும் குறிப்பதன்று; மேற்கொண்டுள்ள எந்த நற்செயலிலும் பெறும் வெற்றி யையும் குறிக்கும். 1.5,6 விசயம்-வீரக்கொடி விசயம், வீரக்கொடி (சா.சி.பி.) என்ற பெயர்களும் வெற்றிலைக்கு உண்டு. விசயம் என்பது வெற்றியைக் குறிக்கும். அதாவது வெற்றியிலைதான். வீரக் கொடி என்பது, வெற்றியின் வீரச் செயலின் நன்னிமித்தமாக வழங்கப்படும் இலையையுடைய வெற்றிலைக் கொடியைக்