பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர, சண்முகனார் 117 "இவர்தரு மெல்லிலைக் காவும் ஏந்திய (826-3). நச்சர் உரை: 'பரத்தலைத் தரும் வெற்றிலைப் படலிகை யையும் முற்றக் காவிவந்து (சுமந்து வந்து) - ,மெல்லிலைக் கா' என்பதற்கு, வெற்றிலைப் படலிகை" என நச்சினார்க் கினியர் பொருள் எழுதியுள்ளார். படலிகை என்பது பெட்டி. வெற்றிலைப் பெட்டியை ஏந்தி வந்தனராம். 1.1.1 மெல்லடகு மெல்லடகு (பொ.ப.நூ.) என்னும் பெயரும் உண்டு. அடகு என்பது இலையைக் குறிப்பதனினும் இலைக்கறியைசமைத்த கீரை உணவைக் குறிப்பதே இலக்கிய ஆட்சியில் உள்ளது. கம்பராமாயணம் - சுந்தரகாண்டத்திலுள்ள, 'அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்தும் என்று இரங்கும்' என்னும் பகுதி காண்க. 'பல்லசைந்தால் பசி ஆறும்' என்பது ஒரு பழமொழி. எனவே, ஏழை மக்கள் சிலர், உணவு இல்லாவிடினும் வெற்றிலை பாக்கு போட்டாவது மென்று கொண்டிருப்பர். இந்த அடிப்படையில் மெல்லடகு என்னும் பெயரைக் கொள்ளலாம். 1.12-13 திரை-திரையல்: திரை (ஜா), திரையல் (மூ. வை. அ.), திரைய லாலிக் கொடி (சி. வை. அ.) ஆகிய பெயர்களும் உண்டு. இவை ஒரே பொருளன. திரைதல் என்பதற்குச் சுருங்குதல் - சுருளுதல் என்னும் பொருள் உண்டு. இந்தப் பொருளின் அடிப்படையிலேயே இப் பெயர்கள் எழுந்துள்ளன. வெற்றிலையை மடித்துப் போட்டுக் கொள்வது ஒரு முறை. மேலே பாக்கு வைத்தும் சுண்ணாம்பு தடவியும் வெற்றிலையை ஒரு சுருள்போல் சுருட்டிப் போட்டுக்