பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 119 அடித்துக் காட்டுவார்கள். வெற்றிலை உண்பவர்களும், ஒவ்வொரு வெற்றிலையையும் கையால் உதறி, தூசு போகக் கையால் வழித்துவிட்டுப் பிறகே சுண்ணாம்பு தடவி உட் கொள்வார்கள். அதனால் இதற்கு உதறி என்ற பெயர் வந்தது எனலாம். மடிக்குருவி முதல் உதறி வரையுள்ள பெயர்கள் சார்பினால் பெறப்பட்டவையாகும். 2. பண்பால் பெற்ற பெயர்கள் 2.1 உறைக்கும் இலை மருத்துவ நூல்களில் வெற்றிலையின் சுவை, விறு விறுப்பான கார்ப்பு (உறைப்பு) என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அகத்தியர் குணபாடப் பாடல் ஒன்றில் கார வெற்றிலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பூணுக்குக் கண்ணாடி ஏன்? வெற்றிலை உறைக்கும் என்பதற்கு நூற் சான்று வேண்டியதில்லை; ஒரு வெற்றிலையைத் தின்று பார்த்தாலே தெரியும். அதனால் இதற்கு உறைக்கும் இலை (சா.சி.பி.) என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. இது பண்பால் வந்தது. 2.2 சிவத்தானம் சிவன் என்றாலே நெருப்பு-வெப்பம் என்னும் கருத்து, "தெருவில் அழகி" என்னும் குப்பைமேனி பற்றிய கட்டுரை யில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சிவத்தானம் என்றால் நெருப்புக்கு-வெப்பத்திற்கு இருப்பிடமானது என்று பொருள் ஆகும். ஸ்தானம் என்னும் சமசுகிருதச் சொல்லின் தமிழ் வடிவம் தானம் என்பது. சீதளத்தைப் போக்கி வெப்பம் தருவதால் இப்பெயர் ஏற்பட்டது. மருத்துவ நூல்களில், இதன் தன்மை வெப்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.