பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 11 பொலிவற்றிருக்கும் ஒரு பொருளுக்கு உவமையாக, வெண்ணிலா இல்லா விண்ணகம் போலவும், தாமரை இல்லாத் தடாகம் போலவும் பொலிவற்றிருக்கிறது-எனக் கூறும் உலகியல் வழக்கும் இக்கருத்துக்கு அரண் செய்யும். இவ்வாறு, தாமரை தண்ணீரோடு நெருங்கிய தொடர்புடையதாயிருத்தலின், தண்ணிர் சார்பான பல பெயர்கள் தாமரைக்குத் தரப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம். 1.2.1,2 அம்புசம் அம்புயம்: அம்பு என்பதற்கு நீர் என்ற பொருள், தைலவ சருக்கச் சுருக்கம் (பாயிரம்-30) என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. அம்புஜம் என்பது வடமொழிச் சொல். 'ஜ' என்னும் வடமொழி வேர்ச் சொல்லுக்குப் பிறத்தல், தோன்றுதல் என்று பொருளாம். பிறப்பைக் குறிக்கும் ஜது, ஜநந் என்பவற்றின் வேர்ச்சொல் 'ஜ' என்று கொள்ளலாம். இராமாநுஜன் = இராம + அது + ஜன் = இராமனுக்குப் பின் பிறந்தவன். சகஜம் = சக + ஜம் = உடன்பிறந்த இயற்கைத் தன்மை. இவற்றால் 'ஜ' என்பதன் பொருள் புலப்படும். அம்பில் ஜனிப்பது = நீரில் தோன்றுவது அம்புஜம் ஆகும். அது அம்புசம் என்றாகிப் பின்னர் அம்புயம் என்று தமிழ் ஒலி பெற்றது. ஆகாசம் ஆகாயம் ஆனமை ஒத்திடற்பாலது. இ. சா.: 'அம்புயத்தின் போதை அறுகாலால் - தும்பி திறக்கத் தேன்ஊறும் திருநாடன்' (19) (நளவெண்பா-கலிநீங்கு படலம்) 1.2.3 அம்போசம், அப்புசம் என்னும் பெயர்களும் இதே பொருளில் தாமரைக்கு உண்டு. அப்பு = நீர். 1.2.4 அம்போருகம்: அப்பு:நீர் உருகம்=பிறப்பது; நீரில் பிறப்பது அம்போருகம் - தாமரை.