பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$25) மா தவம் புரிவாள் வெற்றிலை சீதளத்தைப் போக்கி வெப்பம் தரும் என்பதற் கும் கார-உறைப்பு உடையது என்பதற்கும். அகத்தியர் குணபாட நூல் பாடல் ஒன்று சான்றாக வருமாறு: 'ஐயம் அறுங்காண, அதன்சாரங் கொண்டக்கால் பையச் சயித்தியம்போம் பைந்தொடியே-மெய்யின் கடியின் குணம்போகும் காரவெற் றிலைக்குப் படியும் முத்தோட மிதைப் பார்' கருத்து: வெற்றிலைச் சாற்றைப் பருகினால், ஐயம் (கபம்) அற்றுவிடும்; சயித்தியம் (சீதளம்) குணமாகி வெப்பம் உண்டாகும்; கடி நோய் நீங்கும்; வளி - பித்தம் - ஐயம் ஆகிய முக்குற்றம் தீரும். சயித்தியம் போம் என்பதால், உடலில் சீதளம் குறைந்து வெப்பம் ஏற்படும் என அறியலாம். இதனால் சிவத்தானம் என்னும் பெயர் (சா. சி. பி.) ஏற்பட்டது. இஃதும் பண்பால் வந்ததே. 3. பயனால் பெற்ற பெயர்கள் 3.1 பல்லழகி பல்லழகி, பல்லுக்கு அழகு (சா.சி.பி.) என்னும் பெயர் களும் உண்டு. முத்துப்போல் பல் வெண்மையா யிருந்தால் தான் அழகாயிருக்கும்; வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போட்டுக் கொண்டால், பல் கருஞ்சிவப்பாகிப் பொலி வின்றிக் காணப்படும் என்று எண்ணுவது இயற்கை. பல் வெண்மையாயிருப்பது மட்டும் பல்லுக்கு அழகாகாது; பல் ஆடாமல் அசையாமல் உறுதியாகவும் இருந்தால்தான் பல்லுக்கு அழகாகும். கருஞ்சிவப்பானால், துலக்கி வெண்மை யாக்கிக் கொள்ளலாம். ஆனால், பல் ஆடி அசைந்து, அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக விழுந்து இடையிடையே பள்ளம் காணப்படின், காண்பதற்கு அருவருப்பாயிருப்ப தன்றி, பொக்கைப் பல்-பொக்கை வாய் என்ற ஏளனத் துக்கும் இடமுண்டாகும்.