பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 121 காய்ச்சுக் கட்டி சேர்த்து வெற்றிலை போட்டுக் கொண்டால், முன்பே ஆடி அசைந்து கொண்டிருக்கும் பற்களும் இறுக்கம் பெற்று ஒன்றும் விழாமல் அழகாயிருக்கும். அதனால் இப்பெயர்கள் பொருத்தமானவையே? 3.2 காம சனணி காம சனணி (சா.சி.பி) என்னும் பெயருக்குக் காமத்தை உண்டாக்குவது என்று பொருளாம். வெற்றிலையால் இப் பயன் உண்டு. இலவங்கம் - கிராம்பு போன்ற இன்பப் பொருள்களுடன் வெற்றிலை சேர்த்து உண்ணின், காம உணர்வு பெருகிக் கலவியில் விருப்பம் உண்டாகும். பொருட் பண்பு நூலில், காமம் பெருக்கி - காம வர்த்தநி - Aphrodisiae' என்னும் பெயர் வெற்றிலைக்குத் தரப்பட் டுள்ளது. 3.3,4 தேகலட்சுமி - சாதகலட்சுமி இப்பெயர்கள் (சா.சி.பி), வெற்றிலை உடம்புக்குப் (தேகத்திற்கு) பொதுவில் நலமும் திருவும் உண்டாக்கும்; பலவகையிலும் சாதகமாய் (ஆக்கமாய்) இருக்கும் - என்னும் கருத்தில் இடப்பட்டுள்ளன. இதுபற்றிய அகத்தியர் குண பாடப் பாடல் வருமாறு: 'வெற்றிலைக்கு முன்னம் வெறும்பாக்கை வாயிலிட்டால் குற்றம்.உறும், உறவோர் கூட்டம்போம் - வெற்றிலையை முன்னிட்டுப் பாக்கருந்தும் மூதறிவோர் தம்மார்பின் மன்னிட்டு வாழும்பூ மாது'. கருத்து: வெற்றிலைக்கு முன்னால் வெறும் பாக்கைப் போடலாகாது. முதலில் வெற்றிலையை மட்டும் போட்டு