பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


122 மா தவம் புரிவாள் மென்று பின்பு பாக்கைப் போட்டுச் சுவைத்தால்; நெஞ்சுமார்பு நோய்கள், அதாவது, நெஞ்சு உலர்ந்து போதல், கோழைக் கட்டு ஆகியவை நீங்கி, திருமாலின் மார்பில் இருப்பது போல், பூமாதாகிய திருமகள் உண்டவர் மார்பில் தங்குவாள். மார்பில் திருமகள் தங்குவாள் என்றால், மார்பு-நுரையீரல்-இதயம் பற்றிய நோய்கள் இன்றி உடம்பு நன்றாயிருக்கும் என்பது கருத்து. இவர்கள் உடல் நலத் துடன் முயன்று உழைத்தால் திரு (லட்சுமி-செல்வம்) சேரும் அல்லவா? எனவேதான், தேக லட்சுமி, சாதக லட்சுமி என்னும் பெயர்கள் வெற்றிலைக்குத் தரப்பட்டுள்ளன. வெற்றிலையால் பல் உறுதியாகும்; காம உணர்வு பெருகும்; உடல் பொதுவில் நலமாயிருக்கும் - என்பதற்கு உரிய அகத்தியர் குணபாடப் பாடல் வருமாறு: 'காய்ச்சுக் கட்டிக்கு இறுகும் கட்டவிழ்ந்த தந்தம்: - அங்கார் பூச்சிக் குழாம்இப் புனலில்சாம் - ஆச்சுக்கு இலவங்கம் ஆதிகளால் இன்புண்டாம்; இன்னும் சொல அங்க நோயும் அறும் சொல்' கட்டவிழ்ந்த தந்தம் (பல்) இறுகும்; பூச்சிக் குழாம் (கூட்டம்) சாகும்; காம இன்ப்ம் உண்டாம்; அங்க நோயும் அறும் - என்னும் பகுதிகள் இங்கே கருதற்பாலன. 'துயுடற்குக் காந்தி தரும்; புத்திக்கும் கட்கும் நலஞ் செய்யும்' என்னும் வேறொரு அ.கு.பாடல் பகுதியும் எண்ணத்தக்கது. 3.5 நாகத்தைச் சூரன மாக்கி வெற்றிலைச் சாறு பாதரசத்தைத் தூய்மையாக்கும் என்று முருகேச முதலியார் பொருட் பண்பு நூலில் கூறி யுள்ளார். சாம்பசிவம் பிள்ளையின் அகரமுதலியில் உள்ள ‘நாகத்தைச் சூரணமாக்கி என்னும் பெயரால், வெற்றிலைச்.