பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மா தவம் புரிவாள் 5.3 வெள்ளடை வெள்ளடை என்னும் பெயரும் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. கம்பராமாயணம் . கிட்கிந்தா காண்டம் - கார்காலப் படத்திலுள்ள, "எள்விட இடமொன் றின்றி எழுந்தன இலங்கு கோபம். வெள்ளடைத் தம்பல் குப்பை சிதர்ந்தென விரிந்த மாதோ' (29) என்னும் பாடல் பகுதியில், மென்று உமிழ்ந்த வெற்றிலைச் சக்கைபோல் இந்திர கோபப் பூச்சிகள் எழுந்தன என்னும் கருத்தைக் காணலாம். சுந்தர காண்டம்-காட்சிப் படலத்தி லுள்ள, + 'உருப்பசி உடைவாள் ஏந்தினள் தொடர மேனகை வெள்ளடை உதவ' (79) என்னும் பாடலில், இராவணனுக்கு மேனகை வெற்றிலை (வெள்ளடை) மடித்துத் தந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அடை என்னும் சொல்லுக்கே வெற்றிலை என்னும் பொருள் உண்டு. 'நூறு காய் அடை கூடும் வேறொருவன் தனால்' (7) (சிவஞான சித்தியார் - பரபக்கம் - உலோகாயதன் மத மறுதலை) என்னும் பாடல் பகுதி காண்க. 5.4 அடைக்காய் பாக்குக்கு அடைக்காய் என்னும் பெயர் உண்டு. இலக்கியச் சான்றுகள்: அ) சிலப்பதிகாரம் 'அம்மென் திரையலொடு அடைக்காய் ஈத்த' (16-55)