பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மர் தவம் புரிவாள் அ) கலைக் களஞ்சியச் சான்று வெள்ளை வெற்றிலை தோன்றும் விதமும், வெற்றிலை இனங்களும், வெளிறிய வெள்ளிலையின் பயனும் தமிழ்க் கலைக் களஞ்சியம் - ஒன்பதாம் தொகுதியில் கூறப் பட்டுள்ளது. அப்பகுதி வருமாறு: 'இனங்கள்: வெற்றிலையில் பல இனங்கள் உள. அவை இலையின் உருவம், நிறம், சுவை, மணம் ஆகிய வற்றில் வேறுபடும். சென்னைக்குத் தெற்கே சாதாரண மாகக் காணப்படுபவை கருப்பூரக் கொடி, கள்ளஸ் கொடி, வட்டக் கொடி, சித்துக் கொடி என்பனவாம். கருப்பூரக் கொடி கருப்பூரம் நாறும் மென்பச்சை முதல் பச்சை மஞ்சள் வரையுள்ள நிறம் தோன்றும் உருவம் நீண்டிருக்கும். கள்ளஸ் கொடிதான் அதிக விற்பனைக்கு வருவது. கரும் பச்சை நிறமாகவும் முரடாகவும் காரம் மிகுந்ததாகவும் இருக்கும். அந்தக் கொடி நாள்பட்டதானால், அதில் கிடைக்கும் இலைகள் நிறம் குறைந்தனவாயும் மிருதுவாயும் காரம் குறைந்தனவாயுமிருக்கும். அவை வெள்ளை வெற்றிலை என்று கூறப்படும். கள்ளஸ் வெற்றிலை கருப்பூர வெற்றிலையினும் அகலமாயிருக்கும். வட்டக் கொடி வெற்றிலை பெரிதாயும், வட்டமாயும், அதிக நாள் வாடாததாயுமிருக்கும். சித்துக் கொடி வெற்றிலை சிறியதா யும் வெல்வெட்டைப் போல் மிருதுவாயும், சுவையுடைய தாயும் இருக்கும்.' 'விற்பனை: வெற்றிலை தென்னிந்தியாவிலிருந்து ஒழுங்காகப் பம்பாய்க்கும் ஒரிஸ்ஸாவுக்கும், வேறு சில வடக் கிந்திய இராச்சியங்களுக்கும் மிகுந்த அளவில் போய்க் கொண்டிருக்கிறது. வடக்கிந்திய இராச்சியங்களில் வெற் றிலையை வெளிறச் செய்த பின்னரே விற்கிறார்கள். வெற்றிலைக் காம்பை நீக்கி விட்டு, வாழை இலை