பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர. சண்முகனார் 129 பரப்பிய கூடைகளில் பொதிந்து வைத்துப் பல நாட்கள் காற்றோட்டமுள்ள இருட்டறைகளில் வைத்திருந்தால் வெளிறிவிடும். அடிக்கடி புரட்டிப் பார்த்து வெளிறிய இலைகளைப் பொறுக்கி எடுத்து விற்பார்கள். வெளிறிய இலைகளில் எண்ணெய்ப் பசையும் சீரண சக்தியும் அதிக மாகக் காணப்படும்.' ஆ) பொருட் பண்பு நூற் சான்று வெள்ளை வெற்றிலை தோன்றும் விதத்தினைக் கலைக் களஞ்சியத்தால் அறிந்தோம் வகைகளும் அறியப்பட்டன. முருகேச முதலியாரின் பொருட் பண்பு நூலில் பின்வருமாறு மூவகை கூறப்பட்டுள்ளன: "இஃது இலையின் நிறத்தாலும் மணத்தாலும் கார்ப்புச் சுவையாலும் மூவகைப்படும். மிகுந்த மணமும் காரமும் கறுப்பு நிறமும் இல்லாதது வெற்றிலை கருமையும் காரமும் மிகுந்தது 'கம்மாறு வெற்றிலை'. கருப்பூர மணமும் சிறு காரமுமுடையது கருப்பூர வெற்றிலை'. இதன்படி இம் மூன்றனுள் முதலில் வெற்றுபடியாக வெற்றிலை என்று சுட்டப்பட்டிருப்பது வெள்ளை வெற் றிலையா யிருக்கலாம். அடுத்த கம்மாறு வெற்றிலை என்பது, அகத்தியர் குணபாட நூலில் ஐயம் அறும் என்று தொடங் கும் பாடலில் கார வெற்றிலை எனவும், ஏட்டில் ஒன்று' என்று தொடங்கும் பாடலில் 'கம்மாறு வெற்றிலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பாடல்கள் முழுமையாக முன்னர்த் தரப்பட்டுள்ளன. அகத்தியர் குணபாட நூலி லுள்ள பின்வரும் பாடல், கருப்பூர வெற்றிலையைப் பற்றியதாக இருக்கலாம்:- . . . 'வாயுமந்தம் பீநசம் சுவாசகாசம் அருசி யேயுதர தோடம் இவைபோக்கும்-தூயுடற்குக் காந்திதரும் புத்திக்கும் கட்குநலஞ்செய்யு மணஞ் சார்ந்த நறுந் தம்பல ரசம்'.