பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மா தவம் புரிவாள் 1.2.5 அம்பு சாதம் (மலை. அ.) அம்பு-நீர், சாதம்= பிறத்தல் - தோன்றல். இ. சா. பெருங்கதை - உஞ்சைக் காண்டம் 43.61, 'போதத்தின் அகன்று சாதத்தின் வழிநின்று' எனவே, அம்பில் (சாதம்) தோன்றுவது அம்பு சாதமாம். 1.2.6 சரசீருகம், சரோருகம், சரோசம், சரசிசம், சரோசினி என்பவை தாமரையின் பெயர்கள். சரம் என்றால் நீர். இ. சா: திருவெங்கைக் கலம்பகம் 'கோபம் தோன்ற அதிர்ந்தெழுந்து கோள்கள்தொறும் மின்வாள் வீசிச் சாபந் தோன்ற வளைத் தொழியாச் சரமேபொழிந்து'(84) எனவே, சரசீருகம் முதலாய ஐந்து பெயர்களும் நீரில் தோன்றுபவை என்னும் பொருளில் தாமரையைக் குறிக்கும். சரசீருகம் (சங். அக.). சரசிசம் (சங். அக.), சரோசம் (சூடா. நிக.) சரோருகம் இ. சா: முக சரோருகத்தினார்' (பாரத-வாரணா - 65) 1.2.7 வனசம்: வனம் = நீர் (திவா. நி.) வனத்தில் (நீரில்) தோன்றுவது வனசம்-தாமரை. ஞானாமிர்தம்: "வனச நீர்நிலை நின்று' (46-19) 1.2.8 கஞ்சம்: கம் என்பதற்கு நீர் என்ற பொருள் உண்டு. கஞ்சம் என்பதும் நீரைக் குறிக்கும். மணிமேகலை. பதிகம்-10, கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட' நளவெண்பா - சுயம்வர காண்டம் 'அஞ்சிலம்பே வாய்விட்டு அரற்றுவன கஞ்சம் கலங்குவன: (15) கஞ்சம் = தாமரை.