பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மா தவம் புரிவாள் களின் (Afferent Nerves) வழியாக உள்ளே சென்று, தண்டு வடம் (spinal cord) என்னும் அஞ்சலகத்தால் வாங்கப்பட்டு மூளைக்குச் செலுத்தப்படுகின்றன. பின்னர் மூளையிலிருந்து கட்டளைகளாகிய துலங்கல்கள் (Responses) தண்டுவட அஞ்சலக வாயிலாக - வெளிச் செல் நரம்புகளின் (Efferent Nerves) வழியாக ஐம்பொறிகட்குக் கொண்டு செல்லப்பட்டு இயங்கச் செய்கின்றன. இதனால், கண் பார்க்கவில்லை; மூளை பார்ப்பதற்குக் கண் ஒரு கருவியாக இருக்கிறது என்பது புலனாகலாம். காணும் துணைக்கருவிகள் கருவிகள் (lnstruments) பழுதுபட்டால் பழுது பார்ப்பதுபோல், கண் பழுதுபடின் மருத்துவம் செய்கிறோம். தொலைவி லுள்ள பொருள் தெரியவில்லை யெனின் கண்ணுக்குக் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். மிக்க தொலைவிலுள்ள பொருள்களைப் பார்க்க, இரட்டைத் தொலை நோக்காடி (Binocular), நுண்ணோக்காடி (Microscope) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். உலகின் பெரிய கண் ஆயிரக்கணக்கான கல் (மைல்) தொலைவுக்கு அப்பால் உள்ள பொருள்களை பட்டெறி தொலைநோக்கு ஆடி' (Reflecting Telescope) வாயிலாகப் பார்க்க முடியும். உலகின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய தொலை நோக்கு ஆடிகள் உள்ளன. தென்னிந்தியாவில் கோடைக் கானலில் உள்ளது. இது சிறியது. மிகப் பெரியது, அமெரிக்க-தென் கலிபோர்னியாவில் உள்ள மவுண்ட் பாலொமார் (Palomar) என்னும் இடத்தில் இருக்கும் பட்டெறி தொலை நோக்கி ஆடி'யாகும். இதில் 200 (இருநூறு) அங்குல விட்டமுடைய ஆடி உள்ளது. இரஷ்யாவில் காகசஸ் மலைப் பகுதியில் உள்ள தொலை நோக்கியும் அமெரிக்காவில் உள்ளது