பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 133 போன்றே மிகவும் பெரியதாகும். இவை உலகின் பெரிய கண்கள் எனலாம். இத்தகைய ஆடிகளின் வழியாக ஐயாயிரம் பத்தாயிரம் கல் தொலைவுக்கு அப்பால் உள்ள பொருள்களையும் காணலாம். பூமி உருண்டையாய்ச் சரிந்திருப்பதால், பூமியில் ஒரிடத்திலிருந்து ஐயாயிரம் - பத்தாயிரம் கல் தொலைவிலுள்ள பொருள்களைப் பார்க்கவியலாது. நேர்ப் பார்வையில் விண்ணில் உள்ளவற்றையே பார்க்க முடியும். இங்கே இவ்வளவு கூறியதன் நோக்கம்: மூக்குக் கண்ணாடி முதல் பட்டெறி தொலை நோக்காடி வரை யுள்ள பல ஆடிகள், கண் பார்வையின் கூர்மையைப் மிகுதிப் படுத்த உதவுகின்றன என்பதை அறிவிப்பதேயாகும். உள் கண்ணாடி ஆனால், இக் கண்ணாடிகள் வெளியிலிருந்து கண்ணுக்கு உதவுகின்றன; பொன்னாங்கண்ணியோ உடம்புக்கு உள்ளே சென்று ஊறிக் கண்ணுக்கு உதவு கின்ற உள்கண்ணாடியாகும். ஒர் உத்தியின் உதவி 'ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்' என்னும் நன்னூல் உத்தியின்படி பகலில் நட்சத்திரம் தோன்றி என்னும் பெயரின் அடிப்படையில், வானவியல் தொடர்பான சில செய்திகளை ஈண்டு எண்ணிப் பார்ப்பது நலம்: பகலில் தெரியும் விண்மீன் பகல் இரவு என்பதெல்லாம் இங்கேதான். பகல் இரவு அற்ற இடம் உண்டு. நாம் இங்கே பகலிலும் ஒரு