பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மா தவம் புரிவாள் விண்மீனைப்-ஒரு பெரிய விண்மீனைப் பார்க்கிறோம். அது தான் ஞாயிறு. நம் நிலவுலகுக்கு ஏறக்குறைய 9.3 கோடி கல் (மைல்) தொலைவில் ஞாயிறு இருப்பினும், அது நெருப்புப் பிழம்பாய் இருப்பதாலும் மற்றகோள்களினும் மிகவும் பெரியதாயிருப்பதாலும் நாம் அதைப் பார்க்க முடிகிறது. நம் ஞாயிறு குடும்பத்தைச் சேர்ந்த கோள்களின் குறுக்களவை அறியின், ஞாயிறின் உருவப் பெருமை விளங்கும். ஞாயிறின் குறுக்களவு: 8,64,400 மைல்; புதன்: 3,100 கல்; வெள்ளி: 7,700; பூமி. 7,913; செவ்வாய்: 4,216, வியாழன்: 86,700; சனி: 71,500; யுரேனசு: 32,000; நெப்டியூன்: 31,000; புளுட்டோ: 7,900; நிலா: 2,160. இந்த அட்டவணையை நோக்கின் ஞாயிறின் பருமன் விளங்கும். அதனால் அது நன்றாகத்தெரிகிறது. உண்டைப் பிறக்கம் ஞாயிறு ஒரு விண்மீன் என மேலே கூறப்பட்டது. ஆம்; இரவில் வானில் தெரியும் கோடிக்கணக்கான விண்மீன்களைப் போல் ஞாயிறும் ஒரு விண்மீனே. பெருவெளியாகிய அண்டப் பகுதியில், அளக்க முடியாத - நூற்றுக்கணக்கான கோடி களின் எண்ணிக்கையில் உருண்டை வடிவமான கோள்கள் பலப்பல உள்ளன. வீட்டுக் கூரையின் ஒட்டை வழியாய் வரும் ஞாயிற்றின் ஒளியில் தெரியும் சிறு சிறு அணுத் துகள்கள்போல், அண்டப்பெரு வெளிப்பரப்பில் இந்த கோள்கள் சிறியனவாய் மிதந்து இயங்குகின்றன. இந்தச் செய்தியை, திருவாசகம் - திருவண்டப் பகுதியில் உள்ள, அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்