பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர். சண்முகனார் 135° நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச் சிறிய வாக ... ... ... ..., (1-6) என்னும் பாடல் பகுதியில் அறியலாம். ஆசிரியர் மாணிக்க வாசகரின் வானவியல் அறிவுதான் என்னே! பாண்டிய மன்னனுக்குத் தலைமை அமைச்சராய் இருந்தவர் அல்லவா? இப்பாடல் பகுதியில், உண்டை என்பது கோள்களின் உருண்டை வடிவையும், பிறக்கம் என்பது கூட்டத்தையும் குறிக்கின்றன. இரவில் வானில் தெரியும் கோடிக்கணக்கான விண். மீன்கள் கோள்களேயாகும். நம் ஞாயிறைவிட மிக்க தொலைவில் இருப்பதால் மிகவும் சிறியனவாய்க் காணப் பட்டுக் கண் சிமிட்டுகின்றன. நமது ஞாயிறைவிடப் பெரிய ஞாயிறுகள் பல மேலே மிக்க தொலைவில் உள்ளன. நம் ஞாயிறு குடும்பத்தில் உள்ள கோள்களைப் போலவே, அந்த ஞாயிறு மண்டலங்களிலும் கோள்கள் பல உண்டு. மிக்க தொலைவில் இருப்பதால் இரவில் மிகவும் சிறியனவாய்த் தெரியும் கோடிக்கணக்கான கோள்கள் பகலில் தெரியாமைக்குக் காரணம், அவற்றினும் நமக்கு அண்மையில் உள்ள நம் ஞாயிற்றின் பேரொளியேயாகும். நம் நிலத்திலேயே, இரவில் நன்றாகச் சுடர்விடும் விளக்கு, பகலில் ஞாயிறின் முன்னர் இருப்பதாகவே தெரியவில்லை யல்லவா? மாலையில் தெரியும் விண்மீன் ஆனால், பகலில் மாலையில் நிலா (சந்திரன்) மட்டும் தெரிவதற்குக் காரணம், நிலா நம் நிலத்தின் ஒரு துணைக் கோளாய் (Satellite) இருப்பதும், நிலத்திற்கு அண்மையில் 2,30,900 கல் தொலைவில் மட்டும் இருப்பதுமாகும்.