பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மா தவம் புரிவாள் இலக்கிய ஓவியங்கள் ஞாயிறும் திங்களும் ஒரே நேரத்தில் தெரியும் காட்சி இலக்கியங்களில் ஒவியப்படுத்தப்பட்டுள்ளது. சில சான்றுகள் காண்பாம்: சிலப்பதிகாரம் வேங்கட மலையின் ஒரு கோடியில் ஞாயிறும் மற்றொரு கோடியில் திங்களும் உள்ளனவாம். இரண்டிற்கும் இடையில் மேகம்போல் திருமால் இருக்கிறாராம். மேகமாகிய திருமாலுக்கு உடை மின்னலாம்; வில் இந்திர வில்லாம்; ஒரு கை ஆழி (சக்கரம்) ஞாயிறாம்; மற்றொரு கை சங்கு திங்களாம். 'வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக் கோடி யுடுத்து விளங்குவில்பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி, (11:41-48) (ஆழி = சக்கரம்; சங்கம் = சங்கு) என்பது சிலம்புப் பாடல் பகுதி. ஞாயிறும் திங்களும் திருமாலின் ஆழியும் சங்கும் போல் உள்ளதாகக் கூறும் உவமை பரிபாடல் பாடல் பகுதி யொன்றிலும் இடம் பெற்றுள்ளது: uiflun Lsd "தண்ணளி கொண்ட அணங்குடை நேமிமால் பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த இருவேறு மண்டிலத்து இலக்கம் போல நேமியும் வளையும் ஏந்திய கையால்' (13:6-9)