பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 13 எனவே கஞ்சத்தில் தோன்றுவது கஞ்சம்-தாமரை. கம் + சம் = நீரில் தோன்றுவது. 1.2.9 குசேசயம்: குசம் = நீர் (பிங். நி.). குசத்தில் தோன்றுவது குசேசயம்-தாமரை. 1.2.10 கமலம்: கம் = நீர், அலம் = நீர். நீரில் தோன்றுவது கமலம் (திவா. நி.) 1.2.11 நளினம் = நீர். நளினத்தில் தோன்றுவது தாமரை. க. ரா. சூர்ப்பணகைப் படலம், 'நாளங்கொள் நளினப் பள்ளி நயனங்கள் அமைய'(4) 1.2.12 சவோசினி = சவம் = நீர். சவத்தில் (நீரில்) தோன்றுவது சவோசினி - தாமரை. 1.2.13 சலசம்: சலசப்பூ: சலத்தில் (நீரில்) பிறப்பது சலசம். " சலசத் தீயுள். மலர்ப் பொரியட்ட" (தேவா. 575-6) 1.2.14 வாரிசம்-வாரிசாதம்: வாரி = நீர், நீர்நிலை (பிங்-நி), சாதம்= பிறப்பது, வாரியில் பிறப்பது, வாரிசம்வாரிசாதம். - திருப்புகழ் 7079 "பாத வாரிசத்தில் விழாதே’’ வில்லிபாரதம் - பதினேழாம் போர்ச் சருக்கம் 'வாரி சாதக் காலை மலரென மலர்ந்த முகமும்' (2471) 1.2.15 சந்திரம் சந்திரம் = நீர் (யாழ் - அக.), சந்திரத்தில் தோன்றுவது. சந்திரம் - தாமரை, இதனை, இடவாகு பெயராகக் கொள்ளலாம்.