பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


140 மா தவம் புரிவாள் す என்னும் திருக்குறளோடு பொன்னாங் கண்ணி போட்டி போடுகிறது. இதற்கும் கண்ணுக்கு அணி என்ற பெயர் உண்டு. வெளியே கண்ணுக்கு அணியாக மூக்குக் கண்ணாடி அணிகிறோம்; உள்ளே கண்ணுக்கு அணியாகப் பொன்னாங் கண்ணிக் கீரை உண்ணல் வேண்டும். பயன்களுள் பயன் பொன்னாங் கண்ணியால் விளையும் பயன்கட்குள் சிறந்த பயனாக, கண்ணுக்கு நன்மை தரும் பயனையே மருத்துவ நூல்கள் பெரிது படுத்திப் பேசியுள்ளன: 'காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல் கூசும் பீலிகம் குதாங்குரநோய்-பேசியவையால் என்னாங்கா னிப்படிவம் ஏமமாம் செப்ப லென்னைப் பொன்னாங்கா னிக்கொடியைப் போற்று'. என்பது தேரையர் குணபாடப் பாடல். இதன் உரை: கண் காசம், கண் புகைச்சல், கரு விழி நோய், வாயு, அனல், ஈரல் நோய், கீழ் வாயில் உண்டாகும் நோய்கள் இவைகள் போம்; உடல் பொன்னிற மாம். இது தொடர்பாகப் பொருட் பண்பு நூலில் உள்ள சில செய்திகள் வருமாறு: பொன்னாங்கண்ணியை உப்பில்லாமல் வேக வைத்து, வெண்ணெ யிட்டு நாற்பது நாளுண்ண, கண்ணில் உண்டாகும் நோய்கள் தீரும். இதை அரைத்து அடையாகச் செய்து, ஒரு நீர் நிறைந்த பானை மீது அப்பி, மறுநாள் காலையில் இதை எடுத்துக் கண்களின் மீது வைத்துக் கட்ட, கண் நோய்கள் இரும்.