பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 141 நெய்விட்டு வதக்கிக் கண்களுக்குக் கட்டக் கண் நோய்கள் தீரும். அன்றியும் இதன் தைலத்தைத் தலை மூழ்கிவரக் கண் நோய்கள் தீரும். இதன் சாறு படி 2, கரிசாலைச் சாறு படி ஒன்று, நெல்லிக்காய்ச் சாறுபடி ஒன்று, எண்ணெய் படி 2, பசுவின் பால் படி 2, இதில், அதிமதுரம் பலம் 2, எடுத்துப் பால்விட்டரைத்துக் கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டித் தலை மூழ்கிவர, 96 வகைக் கண் நோய்களும் அழல் நோய்களும் தீரும். மேலுள்ளவாறு இன்னும் பல கூறப்பட்டுள்ளன. இவ்வாறு கண்ணுக்கு உகந்ததாயிருத்தலின் கண்ணி, காணி என்னும் பெயர்கள் ஏற்றனவே. கேத்திர впая நேத்திரம் என்பது கண், நாசி என்பது மூக்கைக் குறிக்குமாயினும் இங்கே பொருந்தாது. நாசி = நாசப் படுத்துவது - அழிப்பது என்பதே சரி. அங்ஙனமாயின், நேத்திரம் என்பதை ஆகுபெயராக்கி, கண் தொடர்பான நோய்களை அழிப்பது எனப் பொருள் கொள்ளினே இப் பெயர் பொருந்துவதாகும். பொன்மேனி பொன் மேனி, பொன் மூலி, பொற் கண்ணி, பொற் காணி, பொன்னாங் கண்ணி, பொன்னாங் காணி என்னும் பெயர்கள், உண்டவரது உடம்பைப் பொன்னொளி பெறச் செய்யும் பயனால் ஏற்பட்டவை. இக்கீரையில் தங்கச் சத்து உள்ளதாம். பொன்னாங்காணி என்னும் பெயர், உண்டால் உடம்பு பொன் ஆகும் காண் நீ" என்று சொல்வதுபோல் அமைந்திருப்பதாக வேடிக்கையாகக் கூறுவதுண்டு, பொன்னாங்கண்ணி என்பதற்குப் பொன்