பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 143 சீதளத்தி-சீதளி இம்மூலிகை உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தருதாலால் சீதளி கடுஞ் சீதளத்தி' என்ற பெயர்கள் உண்டு, தேரையர் பாடலில் அனல் தணியும் எனக் கூறப்பட்டிருப்பதன் பொருள், குளிர்ச்சி தரும் என்பது தானே! சீதை மன்னன் சனகன் வேள்விச் சாலையமைக்க நிலத்தைச் சமன்படுத்த உழுதபோது, உழவுச் சாலில் கிடைத்த பெண்ணுக்குச் சீதை எனப் பெயர் இட்டான். சீதா' என்னும் வட சொல்லுக்கு உழவுசால் என்பது பொருள். நம் பொன்னாங் கண்ணியும் இப்பெயரோடு போட்டி போடுகிறது. பொன்னாங் கண்ணியும் ஒரு வகையில் சீதை யாகும். சீதம் என்றால் குளிர்ச்சி, சீதம் தருவது சீதை யாகும். இப்பெயரைத் தேரையர் காண்டப் பாடல் கூறுகிறது: சீதையை நாடொறுஞ் சீரண வுண்டிடக் காதைசேர் நோயெல்லாம் காதம் ஓடிடுமே

  • 3:

என்பது பாடல் பகுதி. சீதை-பொன்னாங் கண்ணி; காதை=கொலை. இக்கீரையை உண்ணின், கொல்லக்கூடிய நோய்கள் யாவும் காதத்தொலைவு பறந்தோடிடும் என்பது கருத்து. சானகி இம்மூலிகைக்குச் சானகி என்னும் பெயர் வைத்திய மலை யகராதியில் கொடுக்கப்பட்டுள்ளது. சீதை என்னும் பெயரின் அடிப்படையில் இது தரப்பட்டுள்ளது. சீதைக்குச் சானகி என்னும் மற்றொரு பெயர் உண்டல்லவா? ஒரு சொல் விளையாட்டாகும் இது.