பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 145 என்னும் பெயர் தரப்பட்டது. ஈண்டு, தேகங்கள் அத்தனையும் மோகங்கொள் பெளதிகம்' என்னும் தாயு மானாரின் (பரிபூரணானந்தம்-2) பாடல் பகுதி ஒப்பு நோக்கற் பாலது. இத்தகைய உடம்புக்கு வேண்டிய உரத்தைத் தருவதால் பொன்னாங் கண்ணிக்குப் பெளதிக மங்கை என்னும் பெயர் இடப்பட்டது. பல செடி கொடிகள் உடலுக்கு உரம் தரினும், தங்கச் சத்து அமைந்த பொன்னாங் கண்ணி மிகவும் சிறந்த தாகும். இதை உண்டவர் நீடித்த வாழ்நாள் பெறுவர். இதற்குச் சான்றாக, முருகேச முதலியாரின் பொருட் பண்பு நூலில் உள்ள ஒரு பாடலும் அதன் பொருளும் அதில் உள்ளவாறு வருமாறு: 'பொன்னாங் காணி கற்பம்' 'பொன்னாங் கணிக்கீரை போற்றியுணக் கற்பமுறை பொன்னாங் கணிக்கீரை போதுமோ.பொன்னா யிருபதி லக்கமதி யேற்பத் தியத்தை யிருபதி லக்கமதி யே' (பொருள்) செழிப்பாய் வளர்ந்த பொன்னாங் கணிக் கீரையை, செம்மையாக நெய்யில் வதக்கி, மிளகு உப்பு கூட்டி, புளியை நீக்கி, கற்ப முறையின்படி ஒரு மண்டலம் உட்கொள்ளின், உடலுக்கு அழகு, பொன்னிறம், நீண்ட ஆயுள், கண் குளிர்ச்சி இவற்றைத் தரும்' எனவே, வாழ்நாளை நீட்டிக்கும் கீரைக்குப் பெளதிக மங்கை (உடம்பை நீட்டித்து வளர்ப்பவள்) என்னும் பெயர் பொருத்தமே. இதற்கு மேலும் அரண் செய்ய ஒரு கருத்து காத்திருக்கிறது. பெளதிகம்' என்னும் சொல்லுக்குக் கரு நெல்லி என்னும் ஒரு பொருள் சங்கத்து அகராதியில் கூறப் பட்டுள்ளது. அதியமான் கொடுத்த கருநெல்லியை உண்ட