பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மா தவம் புரிவாள் 'மணத்தல் கூடுதல்' (9-53) "இணை விழைச்சு, மைதுனம், புணர்வுப் பெயரே' (9.53) என்பன அந்நூற்பாக்கள். மணத்தல் என்றால் ஆனும் பெண்ணும் கூடுதலாம். ஆணும் பெண்ணும் கூடும் புணர்ச்சிக்கு, இணைவிழைச்சு, மைதுனம் என்னும் இரு பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இங்கே எடுத்துக் கொள்ள வேண்டியது 'மைதுனம்' என்பதையே: ஈண்டு, 1 வதுவைச் சடங்கதனை மைதுனமாக் கொண்ட புதுவைச் சிவானந்தம் போதும் - பதையா விளக்கொளியில் எண்ணெய் வியாபியா னாற்போல் கொளக் கொடுத்தல் சத்தியமாக் கொள்' (ஒழிவி லொடுக்கம் - கிரியைக் கழற்றி . 16) என்னும் பாடற் பகுதி கருதத்தக்கது. யாழ்ப்பாண அகராதியில் மைதுனம் என்பதற்கு விவாகம் (திருமணம்) என்று பொருள் தரப்பட்டுள்ளது. எனவே, மணந்து கொண்டு புணரும் முறையுள்ளவள் மைத்துணி என்பது புலப்படும். மைதுனம் உடையவள் மைத்துணி. இந்த மைத்துணி என்பதன் மரூஉப் பெயரே மச்சி. சரி, இந்த நிலையில் பொன்னாங் கண்ணியை யாருக்கு மைத்துணி யாக்குவது? இது யாருக்கும் மைத்துணி யன்று. உண்டவர்க்குப் புணர்ச்சிவேட்கையை புணர்ச்சிஆற்றலை உண்டாக்குவதால் இது மச்சி (மைத்துணி) எனப்பட்டது எனப் பொருத்திக் கொள்ளல் வேண்டும். இதில் பொன் (தங்கச்) சத்து இருப்பதாலும் உண்பவரைப் பொன்போல் பொலிவு பெறச் செய்வதாலும் இது பொன்னாங்கண்ணி எனப்பட்டது. தங்கப் பொடி (தங்க பசுபம்) மருந்து உண்பவர்க்குப் புணர்ச்சி யாற்றல் மிகும் என்பர். தங்கப் பொடிக்குப் போவது ஏன்! தங்கத்தால் ஆன உண்கலத்தில்