பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர. சண்முகனார் 149 (பாத்திரத்தில்) உணவிட்டு உண்டவர்க்கும் புணர்ச்சி யாற்றல் மிகுமாம். இதற்கு அரணாக, பதார்த்த குண சிந்தாமணியில் உள்ள சித்தர் பாடல் வருமாறு: 'தங்கக் கலத்தில் உண்ணத் தாது விர்த்தியும் பசியும் பொங்க மிகுதிடமும் பூரிப்பும் - அங்கு உறையும் பித்த சோபைப் பிணியிப் பேருலகை விட்டகலும் சுத்தரசத் தீங்கினியே சொல்' தாது விர்த்தி உண்டாகும் என்பது புணர்ச்சி யாற்றலைக் குறிக்கும். மிகு திடமும் பூரிப்பும் உண்டாகும் என்னும் கருத்தும் புணர்ச்சி யாற்றலுக்கு உறுதுணை யானதே. தங்கக் கலத்தில் உண்டாலேயே இப்பயன் விளையும் என்றால், தங்கச் சத்து உடைய பொன்னாங்கண்ணியை உண்டால் புணர்ச்சி யாற்றல் உண்டாகும் எனச் சொல்லத் தேவையில்லை. எனவே (மைதுன ஆற்றலை) புணர்ச்சி யாற்றலைத் தருவது (மைதுனத்திற்கு) புணர்ச்சிக்கு ஏற்றது என்னும் செய்தியின் அடிப்படையில், பொன்னாங் கண்ணிக்கு மைத்துனி - மச்சி என்னும் பெயர் ஒருவாறு பொருந்தலாம். இனி இரண்டாங் காரணத்திற்குச் செல்லலாம். இரண்டாங்காரணம் மச்சி என்பதற்கு, மச்சம் என்பதை அடிப்படைச் சொல்லாகக் கொண்டு, மச்சம் உடையது - மச்சத்தின் இயல்பு உடையது மச்சி எனப் பொருள் கொள்ளலாம். இங்கே மச்சம் என்பதற்கு மீன் எனப் பொருள் கொள்ள வேண்டும். மச்சத்தின் - மீனின் தன்மையுடையது மச்சி. அங்ங்னம் எனில், மீனின் தன்மைகளுள் எந்தத் தன்மையை இங்கே கொள்ள வேண்டும் என்ற வினா எழும்.