பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மா தவம் புரிவாள் பொன்னாங்கண்ணி கண் - கண் பார்வையோடு தொடர்புடைய தாதலின், இங்கே மீனின் கண்பார்வை இயல்பை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மீனின் கண் பார்வை மிகுந்த ஆற்றல் உடையது. மீன் தன் முட்டைகளைத் தன் கண் பார்வையால் கூர்ந்து நோக்கின அளவிலேயே குஞ்சு பொரித்து விடுமாம். இதற்குச் சான்றாக, கைவல்ய நவநீதம் என்னும் நூலின் தத்தி? விளக்கப் படலத்தில் ஒரு பாடல் உள்ளது: 'அன்னதன் சிசுவைஐயன் ஆமைமீன் பறவைபோலத் தன்னகங் கருதி நோக்கித்தடவிச் சந்நிதி யிருத்தி உன்னது பிறவிமாற்றும் உபாயமொன் றுண்டு சொல்வேன் சொன்னது கேட்பாயாகில் தொடர்பவம் தொலையும் என்றார்.' (8) என்பது அப்பாடல். இதன் முதல் இரண்டு அடிகளே இங்கே தேவை. மெய்யறி வாசான் (ஞானாசிரியன்) தன் மாணாக்கனை (சிசுவை), ஆமைபோல் தன் அகத்தால் (மனத்தால்) ஆழ நினைத்தும், மீனைப் போல் தன் கண்களால் கூர்ந்து நோக்கியும், பறவைபோல் தன் கையால் உடம்பைத் தடவிக் கொடுத்தும் அவனுக்கு மெய்யறிவு புகட்டுகிறார் - என்பது முதல் இரண்டு அடிகளின் கருத்து. ஆமை தன் முட்டைகளை நினைத்தாலே குஞ்சு பொரியுமாம். மீன் தன் முட்டைகளைக் கண்களால் கூர்ந்து நோக்கினாலே குஞ்சு பொரியுமாம். பறவை தன் முட்டையைத் தடவித் தழுவி அடைகாத்தால் குஞ்சு பொரியும். இவற்றைப் போலவே ஆசிரியர் மாணாக்கனை உய்விக்கிறார் - என்பது இதன் விளக்கம். இங்கே நாம் மீனை (மச்சத்தை) மட்டும் எடுத்துக் கொள்வோம். மீனைப் போல் நினைத்த அளவிலேயே