பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 மா தவம் புரிவாள் மூன்றாங் காரணம் மூன்றாங் காரணம் ஏறக்குறையப் பொன்னாங் கண்ணி யோடு மிகவும் நெருக்கம் உடையது என்று கூறலாம். மச்சு, மச்சம் என்ற சொற்கட்குப் பொன் என்னும் ஒரு பொருள் உண்டு. இதற்குப் பெரிய புராணத்தில் நல்லதொரு சான்று உள்ளது: சிவபெருமானுக்குச் சுந்தரமூர்த்தி நாயனார் தோழராம். கதையைப் பார்த்தாலும் அவ்வாறே தோன்றுகிறது. சுந்தரர், விருத்தாசலம் என்னும் திருமுது குன்றத்தில், சிவனிடம் பொருள் வேண்டினாராம். சிவன் சுந்தரர்க்குப் பன்னிரண்டாயிரம் பொன் வழங்கினாராம். இப்போது மக்கள் பணத்தை ஓர் ஊரில் உள்ள வங்கியில், (Bank) போட்டு வேறோர் ஊரில் உள்ள வங்கியில் எடுத்துக் கொள்வதைப் போல, திருமுது குன்றத்தில் உள்ள மணி முத்தாற்றில் அப்பொன்னைப் போட்டு, திருவாரூரில் உள்ள கமலாலயம் என்னும் குளத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அருள் செய்ய வேண்டும் என்று சுந்தரர் சிவனை வேண்டினாராம், அவ்வாறே ஆகுக எனச் சிவனும் அருள் செய்தாராம். (இப்போது இப்படியொரு கடவுள் கிடைப்பாரா?) திருமுது குன்றத்திலே தந்த பொன் உயர்ந்த மாற்று (காரட்'-Carat) உடையது. திருவாரூர்க் குளத்தில் எடுக்கும் போது மட்டமான மாற்று உடையதாக இருந்துவிடக் கூடாதல்லவா? அதனால், சுந்தரர் தானங் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்ப்பதுபோல, பொன் கட்டியில் ஒரு சிறு துண்டினை வெட்டியெடுத்து வைத்தக் கொண்டாராம். பின்னர்த் திருவாரூர்க் குளத்திலிருந்து எடுத்ததும், தாம் வெட்டி வைத்திருந்த துண்டு போலவே மாற்றுக் குறையாததாக இருக்கிறதா என உரைத்து