பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மா தவம் புரிவாள் காரணத்தைச் சொல் விளையாட்டாகக் கொள்ள வேண்டும். முதல் இரு காரணங்களும் பயன் பற்றியவை. செயலால் பெற்ற பெயர் இந்தச் செடிக்கு 'வான நாடி என்னும் பெயர் ஜாபிலி தமிழ்ப் பேரகராதியில் தரப்பட்டுள்ளது. பொன்னாங் கண்ணி வளர்ந்து செழிக்க நீர் வளம் நிரம்ப வேண்டு மாதலின், அது மழையை எதிர்பார்த்து வானத்தை நோக் குவதால் 'வான நாடி' என்னும் பெயர் செயல் காரணமாக அதற்கு ஏற்பட்டது. மழைக் காலத்தில் பொன்னாங்கண்ணி மிகுதியாகக் கிடைக்கும். இன்னொரு பெயர்க் காரணமும் கூறலாம். அது சிறிது வலிந்து கூறுவதுபோல் தோன்றலாம். பகல் நட்சத்திரந் தோன்றி என்னும் பெயர் போல, வானத்தில் உள்ள விண் மீன்களைப் பகலிலும் நாடிப் பார்க்கக்கூடிய தொலைக் காட்சிக் கூர்மையைத் தருவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்பதே இன்னொரு காரணமாகும். இந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளப்படின், இது பயனால் பெற்ற பெயர் எனக் கொள்ளல் வேண்டும். வடிவத்தால் வந்தவை மூசி: மூசி என்பது, வடிவால் - உடற் கூறால் பொன் னாங் கண்ணிக்கு உற்ற பெயராகும். மூசுவது மூசி. மூசுதல் என்றால் மொய்த்தல் என்று பொருளாம். இதனை, 'வண்டு மூசு தேறல் மாந்தி' (33) (நச்சினார்க்கினியர் உரை: வண்டுகள் மொய்க்கும் கள்ளை யுண்டு") என்னும் நெடுநல்வாடைப் பகுதியாலும் உரையாலும், அப்பர் தேவாரப் பாடல் ஒன்றிலுள்ள "முசு வண்டறை பொய்கையும் போன்றதே" (பொது)