பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர. சண்முகனார் 155 என்னும் பகுதியாலும் அறியலாம். தேனுக்காக மலரில் வண்டுகள் மொய்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டிடத்தும் மூசு வினைத் தொகையா யுள்ளது. மூசு என்பது, மூசுதல் எனத் தல்' என்னும் தொழிற் பெயர் விகுதியின் தேவையில்லாமலேயே, அடி, உதை என்பன போல, மூசு என முதனிலைத் தொழிற் பெயராக நின்றே மொய்க்கை (மொய்த்தல்) என்னும் பொருளைத் தரும். இதனை, " வண்டு முசுஅறா நறவம் ஆர்ந்தவர்' (4.18) என்னும் சீவக சிந்தாமணிப் பாடற் பகுதியால் அறியலாம். வண்டு மூசு அறா நறவம் என்றால், வண்டுகள் மொய்க்கை நீங்காத - அதாவது - வண்டுகள் எப்போதும் மொய்த்துக் கொண்டிருக்கிற தேன் - என்று பொருளாம். வண்டுகள் மலரில் மொய்த்தல் என்று என்ன! மக்களும் கும்பலாக ஓரிடத்தில் சூழ்ந்து கொண்டிருந்தால், அங்கே சனங்கள் கூட்டமாய் மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று கூறுவது மரபு. பொன்னாங் கண்ணியும் இலைகளும் காம்புகளும் கணுக்களும் கணு வேர்களும் பூக்களுமாக அடர்ந்து படர்ந்து மொய்த்துக் கொண்டிருக்கும். இருபத்தைந்து காசுக்குப் பொன்னாங் கண்ணிக் கீரை வாங்கினால், அதைக் கீரை வேறு - மற்றவை வேறு என ஆய்ந்து எடுப்பதற்கு ஐம்பது காசு கூலி கொடுக்க வேண்டும் என வேடிக்கையாகச் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு ஒன்றோடொன்று மொய்த்துக் கொண்டிருக்கும். இவ்வாறு மொய்த்திருப்ப தால் - மூசுவதால் மூசி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லலாம். வேறு பெயர்க் காரணம் உளதேல் கொள்ளலாம்.