பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மா தவம் புரிவாள் பெருங் கொடுப்பை பெருங் கொடுப்பை என்பதற்கு, 'பெரிய அல்லது செழுமையாக உள்ள பொன்னாங்கண்ணி' எனச் சா.சி.பி. அகர முதலியில் பொருள் தரப்பட்டுள்ளது. இது, நீர் வளமுள்ள நிலப்பாங்கில் செழுமையாக வளரக் கூடியது தான். செழுமை எனினும் கொழுமை எனினும் ஒரளவு பொருள் ஒன்றே, கொழுமை - கொழுப்பு என்ற அடிச் சொல்லிலிருந்தே கொடுப்பை' என்ற சொல்தோன்றியிருக்க வேண்டும். கொழுப்பு உள்ளது கொழுப்பு; அது கொடுப்பை எனத் திரிந்திருக்கவேண்டும். ழகரம் டகரமாவது உண்டு. தமிழில் கோழி என்பது கன்னடத்தில் கோளி எனவும் தெலுங்கில் கோடி எனவும், தமிழில் ஏழு என்பது கன்னடத்தில் ஏளு எனவும் தெலுங்கில் ஏடு எனவும், தமிழில் கூழு (கூழ் +உ=கூழு= உணவு) என்பது கன்னடத்தில் கூளு எனவும் தெலுங்கில் கூடு எனவும் திரிந்து வழங்குவது காண்க. கூழு என்பதன் தெலுங்கு வடிவமான கூடு என்பது இலக்கிய ஆட்சியும் பெற்றுள்ளது. வேமன்னரின் வேமன்ன பத்தியம் என்னும் நூலில் உள்ள பப்புலேனி கூடு (467) (பருப்பு இல்லாத உணவு), நெய்யிலேனி கூடு (469.நெய்யில்லாத உணவு), 'ப்ரியமுலேனி கூடு (விருப்பம் இல்லாத உணவு) என்னும் தெலுங்குப் பாடல்களில் கூடு வந்துள்ளமை காண்க. எனவே, செழுமை - கொழுமை என்னும் பொருள் உடைய கொழுப்பை என்பது கொடுப்பை எனத் திரிந்திருக்கலாம். எனவே, பெருங் கொடுப்பை என்னும் பெயர் வடிவால் - உடற் கூறால் வந்ததாகும், கான வடிவழகி சிவப்புப் பொன்னாங்கண்ணி, கானத்தில் (சோலையில்) அழகான வடிவுடன் காணப்படுவதால் காணவடிவழகி" என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.