பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 157 இந்த இனத்தில் முள் உடையதும் உண்டு; அது 'முள் பொன்னாங்கண்ணி எனப்படும். இதற்குச் சுகதிர்' என்னும் பெயர் சா.சி.பி. அகர முதலியில் தரப் பெற்றுள்ளது. சு = நல்ல, கதிர் - கதிரையுடைய செடி எனப் பொருள் பண்ணுவது சரியாகத் தோன்றவில்லை, சு=வட மொழிச் சொல்; கதிர் தமிழ்ச் சொல். இரண்டும் இவ்வாறு இணைய முடியாது. பொருத்தமான பொருள் புலப்படவில்லை. அறிந்தார் வாய்க் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சொல் விளையாட்டு பதுமாலயம் பொன்னாங்கண்ணிக்குப் 'பதுமாலயம்' என்னும் பெயர் சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டுள்ள்து. இஃது ஒரு சொல் விளையாட்டுப் பெயராகும். பொன் என்பதற்குத் திருமகள் (இலட்சுமி) என்னும் பொருள் உண்டு. இதனைச் சீவக சிந்தாமணியிலுள்ள பொன் துஞ்சு மார்பன் புனலாட்டிடைப் புன்கணெய்தி" (பதிகம்-14) என்னும் பாடல் பகுதியால் அறியலாம். மற்றும், திவாகர நிகண்டில் பொன், பதுமை என்பனவும், பிங்கலத்தில் கமலை, பதுமை, பூமகள் என்பனவும், சூடாமணியில் பொன், அலர் மகள், பூமின், சலசை என்பனவும், கயாதர நிகண்டில் பொன், மலராள் என்னும் பெயர்களும், ஆசிரிய நிகண்டில் பூமகள், கமலை, பொன், பதுமை, கோகனகை என்பனவும் திருமகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிகண்டுப் பெயர்களுள், பொன் என்பது, செல்வத்திற்கு உரியவள், பொன்னிறம் உடையவள் என்னும் பொருளது. மற்ற பெயர்கள், பதுமமாகிய தாமரை மலரை இருப்பிட