பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மா தவம் புரிவாள் மாகக் கொண்டவள் என்னும் பொருளன. எனவே, பொன்னுக்கும் பதுமத்திற்கும் உள்ள தொடர்பு தெரிய வரும். பதுமாலயம் (பதும-ஆலயம்) என்பது, தாமரையைக் கோயிலாக் கொண்ட திருமகளை நினைவு செய்கிறது. திருமகளுக்குப் பொன் என்னும் பெயர் உண்டு. எனவே, பொன் என்னும் சொல்லை முதலில் கொண்டுள்ள பொன்னாங்கண்ணிக்குப் பதுமாலயம் என்னும் பெயர், ஒரு சொல் விளையாட்டாகத் தரப்பட்டுள்ளது. இத்தகைய சொல் விளையாட்டுக்குப் பலப்பல எடுத்துக் காட்டுகள் உண்டெனினும், ஈண்டு ஒன்றே ஒன்று காண்பாம்: சிவகரந்தை' என்னுஞ் செடிக்கு விடையூர்தி என்னும் பெயர் சித்த வைத்திய அகராதியில் தரப்பட்டுள்ளது. சிவகரந்தை என்பதன் முன்சொல்லாகிய சிவ' என்பதைக் கொண்டு, விடையை (காளையை) ஊர்தியாகக் (வாகன மாகக்) கொண்ட சிவன் பெயராகிய விடையூர்தி' என்னும் பெயர் தரப்பட்டுள்ளமை காண்க. வாது வர்ணம் வாது வர்ணம் என்பதும் சொல் விளையாட்டுப் பெயரே. வர்ணம் (வருணம்) என்பதற்குப் பொன் என்ற பொருள் உண்டு. வாதுதல் என்பதற்கு அறுபடுதல் - வெட் டுப்படுதல் என்ற பொருள் உண்டு; இதனைப் புறத்திரட்டு என்னும் தொகை நூலின் மூதின் மறம்' என்னும் பகுதியில் 32 GIT@ss 'வாதுவல் வயிறே வாதுவல் வயிரே ... எம்மில் செய்யாப் பெரும்பழி செய்த கல்லாக் காளையை ஈன்ற வயிறே. (9) என்னும் பாடற் பகுதியில் காணலாம். போரில் தோற்ற மகனைப் பெற்ற கொடிய வயிறே! நீ அறுபடுவாய் -