பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர். சண்முகனார் 15 1.3 சேறும் தாமரையும் 1.3.1 பங்கஜம் = பங்க+ஜ =சேற்றில் தோன்றுவது. பங்கம் = சேறு. இ.சா.: - பரிபாடல்: செங் குங்குமச் செழுஞ் சேறு பங்கஞ் செய் யகில் பல பளிதம்' (10-81, 82) பங்கஜம், பங்கசம் ஆகிப் பின் பங்கயமாகத் தமிழ்நடை பெற்றது. அம்புஜம் அம்புயம் ஆனாற் போல. பங்கயம் = சேற்றில் தோன்றும் தாமரை, இ.சா. பங்கயக் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்' (குளாமணி - நாட்டுப் படலம் - 2) 1.3.2 பங்கேருகம்: பங்கத்தில் பிறப்பது. இ.சா. 'இராம நாதன் பாத பங்கேருகங்கள்' : (சேதுபுராணம் - தோத். - 40) 1.3.3 பங்கசாதம்: பங்கத்தில் தோன்றுவது. இ.சா. பங்க சாதப் பரிமளங்கொள் பானு ராச குனுவே' (பாரதம் - வாரணா. - 61) 1.4 வண்டும் தாமரையும் - 1.4.1 வண்டுணி: தாமரைப் பூவில் வண்டு தேன் உறிஞ்சும். தாமரைப் பூவிலிருந்து உறிஞ்சி ஆக்கிய தேன் உண்பவரின் கண்ணுக்கு நலம் பயக்குமாம். தாமரையில் வண்டு விரும்பித் தேன் உறிஞ்சும் என்பதால், தாமரைக்கு வண்டுழு’, (நிக.), வண்டுணி', (சா.சி.பி.), வண்டுணிக் கொடி (சி.வை.அ.) என்னும் பெயர்கள் தரப்பட்டுள்ளன. வண்டு உழுவது = வண்டுழு வாகும், வண்டு உண்பது வண்டுணியாகும்.