பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 161 'மலர்ச் சுணங்கு = வேங்கை மலரைப் போன்ற தேமல் - என்பது பழைய உரை. பசு மலரின் சுணங்கு என்பது, மலரின் சுணங்கு நிறமான - பொன்னிறமான மகரந்தத்தை யும் குறிக்கிறது. அடுத்த பாடல் பகுதி, தலைவனைப் பிரிந்ததால் தலைவிக்குப் பொன்னிறப் பசலை தோன்றியுள்ளதை அறிவிக்கிறது. திதலை = தேமல். மாமை = நிற அழகு. மற்றும், சுணங்கு அணி ஆகம் (மார்பு), சுணங்கு அணி மென்முலை, சுணங்கு அணி வனமுலை ஆகிய தொடர்கள் சங்கநூல்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ளன. பெருங்கதை - மகத காண்டம் 'மின்னுறழ் சாயல் பொன்னுறழ் சுணங்கின்' (16.5) சுணங்கு பொன்னிறமானது என்பது பெருங்கதைப் பகுதி யாலும் புலனாகும். எனவே, இந்தத் துறையில், வரி, பொன், பசலை, சுணங்கு, திதலை, தேமல் என்பன ஒரு பொருட் சொற்களாம். இங்கே மற்றொரு கருத்தும் நினைவு கூரத் தக்கது. பண்டொரு காலத்தில் நாணயம் (Coin) பொன்னால் செய்யப்பட்டிருந்தது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி (Tax) பொன்காசாகக் கொடுக்கப்பட்டது. பொன் செலுத் துதல் - வரி செலுத்துதல் என்பன ஒரு பொருளவாய் வழங்கப்பட்டன. வரியாகச் செலுத்தப்பட்ட பொன் மேனிப் பொன்' எனப் பண்டு பெயர் வழங்கப்பட்டது. மாடுகள் நிரம்ப இருப்பது செல்வமாகக் கருதப்பட்டதால் மாடு என்னும் சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருள் ஏற்பட்டது போல, பொன் வரியாகச் செலுத்தப்பட்டதால் பொன்னுக்கு வரி என்னும் பெயர் ஏற்பட்டது. ஆகவே,