பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. யானை வணங்கி நெருஞ்சி உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் உள்ளது. நெருஞ்சிக் குடும்பம் ஏறக்குறைய 225 இனங்கள் உடையது எனச் சொல்லப்படுகிறது. இஃது ஆங்கிலத்தில் Small Caltrops என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. Caltrops என்பதற்குக் கப்பணம் என்பது பொருள். நான்கு பக்கம் கூரிய முள் உடைய இருப்பு உருண்டைக்குக் கப்பணம் என்பது பெயர். இந்தக் காலத்தில் எதிரியின் போர்ப் படைகளின் வருகையைத் தடுக்க வழிகளில் கண்ணி வெடிகள் வைத்திருப்பது போல், முன்பு எதிரியின் யானைப் படையும், குதிரைப் படையும் வருவதைத் தடுக்க வழிகளில் கப்பணங்களை இட்டு வைப்பர். கப்பண முள் தைப்பதால் யானைகளும், குதிரைகளும் முன்னேறாமல் பின் செல்லும். பெரிய இருப்புக் கப்பணங்களைப் போலவே சிறிய நெருஞ்சிக் காய்களையும் (Small caitrops) வழியில் தூவி வைப்பது வழக்கமாம். நாம் நெருஞ்சி முள் என்று சொல்வது நெருஞ்கிக் காயாகும். திருவள்ளுவர் இதனினும் ஒரு படி மேலே சென்று - அதாவது - நெருஞ்சிக் காய் என்னாமல், நெருஞ்சிப் பழம் என்று கூறியுள்ளார்: 'அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்' - (1120) என்பது குறள். கருத்து: (மென்மைக்குப் பெயர் பெற்றன வாகிய) அனிச்ச மலரும், அன்னத்தின் சிறகும், இவள் காலடிக்கு நெருஞ்சிப்பழ முட்கள் போலாம்'. வள்ளுவரின் வழி நின்று திருத்தக்கதேவரும் இவ்வாறு கூறியுள்ளார்: