பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 169 1. பயனால் பெற்ற பெயர்களால், எந்தச் சரக்கால் எந்த நோய் குணமாகும் என எவரும் எளிதில் அறிந்து கொள்ளலாம். 2. இதனால், கை வைத்தியம் எனப்படும் பழைய வீட்டு மருத்துவம் புத்துயிர் பெறும். 3. எதற்கெடுத்தாலும் அதாவது எளிய - சிறிய நோய்க்கெல்லாம். ஆங்கில முறை மருத்துவரிடம் (டாக்ட ரிடம்) ஓடாமல் தாமே மருத்துவம் செய்து கொள்ளலாம். இதனால், காலம், முயற்சி, பணம் ஆகியவை மிச்ச மாகும். 4. வீட்டு மருத்துவ முறையால், தொலைவிலுள்ள மர இனப் பொருள்கள் எளிதில் - விரைவில் கிடைக்கா விடினும், நாட்டு மருத்துவக் கடைகளில் விலைக்குக் கிடைக்கும். அங்கிருந்து பெற்று நோயைக் குணப்படுத்த லாம். நகரில் உள்ளவர்க்குத் தெரியா விடினும், சிற்றுார் களில் உள்ள மக்கட்கு, மருத்துவ மர இனப் பொருள் களைப் பற்றி நன்கு தெரியும். அவர்கள் தம் ஊர்ப் பக்கத்திலேயே - இருக்குமிடம் அறிந்து எடுத்துக் கொண்டு வந்து பயன்படுத்திக் கொள்வர். 5. சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற பொருள்களை எவரும் அறிந்திருப்பர். அவற்றால் எளிதில் - விரைவில் பயன் பெறலாம். 6. இத்தகைய முயற்சியால், மக்கட்குத் தன்னம்பிக் கையும் தன்னுக்கமும் தற்சார்பும் உண்டாகும். 7. சில மர இனப் பெயர்களால் வட மொழி அறிவும் பிற மொழி அறிவும் கிடைக்கும். 8. பொதுவாக மரநூல் (தாவர நூல்) அறிவும் வேளாண்மை அறிவும் பெறலாம்.