பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மா தவம் புரிவாள் 9. சில பெயர்களால் நிலநூல் அறிவு, வாணிக அறிவு, வரலாற்றறிவு கிடைக்கும். எ.கா: கரிசலாங் கண்ணி போன்ற பெயர்களால் நிலநூல் அறிவு கிடைக்கும். 10. புராணங்கள் தொடர்பான செய்திகளும் இலக்கிய அறிவும் பெற முடியும். மால் துயில் முதலிய பெயர்களால் புராணச் செய்திகளும், கோளி - வசந்த துரதம் முதலிய பெயர்களால் இலக்கிய அறிவும் உண்டாகும். 11. சொற் பொருள் கூறும் நிகண்டு நூலறிவும், அதனால், சொல்லுக்குப் பொருள் காணும் திறனும் உண்டாகும். இதனால் இலக்கியங்களைப் பொருள் புரிந்து சுவைத்துப் படிக்கும் பயிற்சியும் ஏற்படும். 12. மருத்துவ அறிவுடன் பல் வகை அறிவியல் அறிவும் கிடைக்கும். எ.கா: உப்பு மூலிகை, கந்தகச் சத்துரு, முதலியன. 13, 14. சொல் விளையாட்டுச் சுவையும் ஒப்புமைக் கலைச் சுவையும் கிடைக்கின்றன. 15. நுட்பமாய் எண்ணிப் பார்க்கும் (சிந்திக்கும்) பயிற்சி, கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி அறிவு முதலிய திறன்கள் வளரும். எ. கா:- அறமறை, தவசி, கற்பு, கைகேசி முதலியன. 16. நுனிப்புல் மேயாமல், எதையும் உற்று நோக்கும் பயிற்சி உண்டாகும். எ.கா:- மறி. 17. சில பெயர்கள், படிப்போர்க்குக் கற்பனை ஆற்றலை மிகுக்கும். எ.கா:- வடுகும் தமிழும், தாயைக் கொன்றான் முதலியன. 18. நல்ல நடை முறை - நல்ல பழக்க வழக்கம், வாழும் வழி ஆகியவை கைவரப் பெறும், இன்னதை