பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 171 உண்டால் இன்னின்ன கேடுகள் வரும்; இன்னதை உட்கொள்ளின் இன்னின்ன நண்மைகள் உண்டாகும் என அறிந்து, நல்ல பழக்க வழக்க நடைமுறைகளைப் பின் பற்றவும், அதனால் நீண்ட நாள் நோயின்றி இனிது வாழவும் துணை செய்யம். இவ்வாறு இன்னும் நிறைகள் பல இயம்பிக் கொண்டு செல்லலாம். 4. குறை நிறை அமைதி: 4.1 மிக்க கொளல் எதிலும் ஒரு சிறிதேனும் குறை இருக்கலாம். ஆனால், அதிலுள்ள நிறைகளைக் கொண்டு குறையை அமைதி செய்துகொள்ள வேண்டும். ஒன்றிலுள்ள குணங்களையும் (நிறைகளையும்) குற்றங்களையும் ஆய்ந்து, குற்றம் மிகுதி யாயின் தள்ளலாம்; குணம் மிகுதியாயின் கொள்ளலாம் என வள்ளுவர் கூறியுள்ளார்: ' குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (504) என்பது குறட்பா, இதன்படி நோக்கின், மர இனங்கட்குக் கொடுக்கப்பட்டுள்ள செயற்கைக் கலைப் பெயர்களால் நன்மை மிகுதி என்பது புலப்படும். மிகப் பல பெயர்கள் பயனால் இடப்பட்டவை யாதலின், பயனறிந்து மர இனச் சரக்குகளைப் பயன்படுத்தி மக்கள் நல்வாழ்வு பெற வாய்ப்பு உண்டு. 4.4.1 புதுப் பெயர்க்காரணம் இயற்கைப் பெயர்களைச் சொன்னால் மருத்துவம் பயனளிக்காது (பலிக்காது) என்ற ஒரு நம்பிக்கை காரண மாகவும், எளிய மர இனப் பெயர்களை அறியின் மக்கள்